Election
செ.வெ.எண்:-11/2025
நாள்:-03.11.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் நாளை (04.11.2025) முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்படவுள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி பல்வேறு கட்டங்களாக 28.10.2025 முதல் 07.02.2026 வரை நடைபெறுகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் இப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் (Enumeration Form) நாளை (04.11.2025) முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு, 04.12.2025-க்குள் மீள பெறப்படும்.
அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்படும் இரட்டை படிவங்களை, பொது மக்கள் முழுமையாக பூர்த்தி செய்து கையொப்பத்துடன், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மீள வரும்போது சமர்ப்பத்திட வேண்டும்.
அவ்வாறு பெறப்படும் படிவங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். எனவே, வாக்காளர் வாக்குச்சாடிவ நிலை அலுவலர்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு நல்கி, இத்திருத்தப்பணியினை சிறப்பாக நடைபெற உதவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும், இப்பணி தொடர்பாக சந்தேகங்கள் ஏதும் இருப்பின், கீழ்காணும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
| வ.எண் | சட்டமன்றத் தொகுதியின் பெயர் | தொலைப்பேசி எண். |
| 1 | மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திண்டுக்கல் | 6379599961 |
| 127- பழனி | 7373244851 | |
| 128- ஒட்டன்சத்திரம் | 04545-242250 | |
| 129- ஆத்தூர் | 0451-2461767 | |
| 130- நிலக்கோட்டை | 0451-2460561 | |
| 131- நத்தம் | 6369914540 | |
| 132- திண்டுக்கல் | 0451-2432615 | |
| 133- வேடசந்தூர் | 6379033191 |
மேற்கண்ட விபரப்படி உள்ள தொலைப்பேசி எண்ணிற்கு சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பான சந்தேகங்கள் மற்றும் குறைகள் ஏதேனும் இருப்பின் வாக்காளர்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தங்களது சட்டமன்றத் தொகுதிக்குரிய உதவி மையத்திற்கு (Help Desk) தொடர்பு கொள்ள தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.