Close

ADI DRAVIDAN AND TRIBAL WELFARE DEPT

Publish Date : 05/11/2025

செ.வெ.எண்:-12/2025

நாள்:-04.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

2024-2025 ஆம் ஆண்டிற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த இலக்கிய படைப்புகளில் 11 நபர்களது படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இவர்களது படைப்பினை வெளியிட உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் / மதம் மாறிய ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த 9 எழுத்தாளர்கள் மற்றும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் பிரச்சனைகளைப் பற்றி எழுதும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் அல்லாத ஒரு எழுத்தாளர் மற்றும் பழங்குடியினர் பற்றி எழுதும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாத எழுத்தர் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படுவர். இதனை ஊக்குவிக்கும் வண்ணம் இவர்களது சிறந்த இலக்கிய படைப்பினை வெளியிடதலா ரூ.1,00,000/- ஆக பின் வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு வழங்கப்படவுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சார்ந்த எழுத்தாளர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

1. எழுத்தாளர்களுக்கு வயது வரம்பு இல்லை.

2. கதை, கட்டுரை, கவிதை, வரலாறு மற்றும் புதினம் ஆகியவை எதுவாகவும் இருக்கலாம்.

இருப்பினும் தமிழ்மொழியிலேயே படைப்பு இருக்க வேண்டும். பிற மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட சிறந்த தமிழ் மொழி படைப்பாகவும் இருக்கலாம்.

3. எம்.பில்., பி.எச்.டி., போன்ற படிப்புகளுக்குத் தயாரிக்கப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கு அவை அரிதான சிறப்புடையதாக இருக்க வேண்டும்.

4. படைப்புகள் 90 பக்கங்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

5. ஏற்கனவே சந்தையில் வெளியிடப்பட்டுள்ள படைப்புகளை கொண்டு விண்ணப்பித்தல் கூடாது.

6. ஒரு முறை விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட எழுத்தாளர் 5 ஆண்டுகளுக்கு பிறகே விண்ணப்பிக்க வேண்டும்.

7. படைப்புகளை தேர்ந்தெடுத்தல் குறித்து அரசால் அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவின் முடிவே இறுதியானது.

தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்கள் இதற்கான விண்ணப்பங்களை தொடர்புடைய மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களிலும், சென்னை ஆதிதிராவிடர் நல ஆணையரகத்திலும் வேலைநாட்களில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், tn.gov.in என்ற இணையதளத்திலும் (website) (or) https://www.tn.gov.in/form_view.php?dep_id=MQ== பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்.17.11.2025. விண்ணப்பதாரர்கள் தங்களது படைப்பினை இரு நகல்களிலும் டிஜிட்டல் (Digital) முறையிலும், உரிய படிவத்தில் தவறாமல் கைபேசி எண்ணிணை குறிப்பிட்டு உரிய காலத்திற்குள் சமர்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.