Close

TAMIL DEVELOPMENT DEPT

Publish Date : 05/11/2025

செ.வெ.எண்:-16/2025

நாள்:-04.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

மகாத்மா காந்தி பிறந்த நாளான 02.10.2025-ஆம் தேதியினை முன்னிட்டு வருகின்ற 13.11.2025 அன்றும், ஜவகர்லால் நேரு பிறந்த நாளான 14.11.2025-ஆம் தேதி அன்றும் மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பேச்சுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மகாத்மா காந்தி பிறந்த நாளான 02.10.2025-ஆம் தேதியினை முன்னிட்டு 13.11.2025 (வியாழக் கிழமை) அன்றும், ஜவகர்லால் நேரு பிறந்த நாளான 14.11.2025 (வெள்ளிக்கிழமை) அன்றும் மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பேச்சுப் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இவ்வறிவிப்பின்படி 2025-2026ஆம் நிதியாண்டில் திண்டுக்கல், அங்குவிலாஸ் மேல்நிலைப் பள்ளியில் மகாத்மா காந்தி பிறந்தநாள் (அக்-02) முன்னிட்டு பேச்சுப்போட்டி 13.11.2025 (வியாழக்கிழமை) அன்றும், ஜவகர்லால் நேரு பிறந்தநாள் (நவ-14) முன்னிட்டு பேச்சுப்போட்டி 14.11.2025 (வெள்ளிக் கிழமை) அன்றும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை) பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக உரிய வழிமுறைகளை பின்பற்றி பள்ளி மாணவர்களுக்கு காலை 10.00 மணி முதலும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 2.00 மணி முதலும் பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளன.

மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 13.11.2025அன்று முற்பகல் 10.00 மணிக்கு நடைபெறவுள்ள பள்ளி மாணவர்களிடையேயான பேச்சுப்போட்டிக்கு ”1) சத்திய சோதனை 2) தண்டியாத்திரை 3) மதுரையில் காந்தி ஆகிய தலைப்புகளிலும், அதே நாள் பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ள கல்லூரி மாணவர்களிடையேயான பேச்சுப் போட்டிக்கு 1) வெள்ளையனே வெளியேறு இயக்கம் 2) காந்தியின் அகிம்சைக் கொள்கை 3) காந்தியடிகளும் ஒத்துழையாமை இயக்கமும்” எனும் தலைமைப்புகளில்” மட்டுமே போட்டி நடத்தப்படும்.

ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளையொட்டி 14.11.2025 முற்பகல் 10.00 மணிக்கு நடைபெறவுள்ள பள்ளி மாணவர்களிடையேயான பேச்சுப்போட்டிக்கு “1) குழந்தைகள் போற்றும் நேரு மாமா 2) ஆசிய ஜோதி 3) மனிதருள் மாணிக்கம்” எனும் தலைப்புகளிலும், அன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ள கல்லூரி மாணவர்களிடையேயான பேச்சுப்போட்டிக்கு 1) நேரு என்னும் வாசிப்பாளர் 2) நேருவும் பஞ்சசீலக் கொள்கையும் 3) சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர்” ஆகிய தலைப்புகளில் மட்டுமே போட்டி நடத்தப்படும்.

மாவட்டங்களில் முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்மன்றம் செயல்படும் அரசுப்பள்ளிகள் மற்றும் அரசுக் கல்லூரிகளில் உள்ள மாணவர்களுகளிடையே முதல் சுற்றுப் பேச்சுப்போட்டியினை அப்பள்ளிகளிலேயே / கல்லூரிகளிலேயே நடுவர் உட்பட அவர்களாலேயே தெரிவு செய்து போட்டிகளை மாணவர்களுக்கு நடத்தப்பெற்று வெற்றி பெற்ற மாணவர்களில் ஒரு பள்ளிக்கு ஒரு மாணவர் வீதமும், ஒரு கல்லூரிக்கு இரண்டு மாணவர்கள் வீதமும், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் மற்றும் கல்லூரி முதல்வரின் பரிந்துரைக் கடிதத்துடன் போட்டியில் கல்ந்துகொள்ள அனுப்பி வைக்க வேண்டும். மேலும் வாலாயமாகத் முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மன்றம் செயல்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தவிரப் பிற பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தலைமையாசிரியர் மற்றும் முதல்வரின் பரிந்துரைக் கடிதத்துடன் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

கல்லூரி பேச்சுப் போட்டிகளில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/-, இரண்டாம் பரிசு ரூ.3000/-, மூன்றாம் பரிசு ரூ.2000/- என்ற வகையிலும், பள்ளிப் பேச்சுப் போட்டிகளில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/-, இரண்டாம் பரிசு ரூ.3000/-, மூன்றாம் பரிசு ரூ.2000/- என்ற வகையிலும் பரிசுகள் வழங்கப்படும். இது தவிர ஒவ்வொரு போட்டியிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூ.2000/- வீதம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.