ITI Spot Admission
செ.வெ.எண்:-35/2025
நாள்: 10.11.2025
திண்டுக்கல் மாவட்டம்
குஜிலியம்பாறை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை 14.11.2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
அரசு தொழிற் பயிற்சி நிலையம் குஜிலியம்பாறையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 100% சேர்க்கையை பூர்த்தி செய்யும் பொருட்டு பயிற்சியாளர்களின் நலன் கருதி நேரடி சேர்க்கை 14.11.2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இத்தொழிற் பயிற்சி நிலையங்களில் பொறியியல் தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பயிற்சியில் சேருபவர்களுக்கு தமிழக அரசு மூலம் மாதந்தோறும் ரூ.750/- உதவித்தொகை, விலையில்லா மிதிவண்டி, பாடப்புத்தகம், வரைபடக்கருவிகள், சீருடை(2செட்) வழங்கப்படுகிறது. தமிழ்ப் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தீன்கீழ் தகுதி வாய்ந்த பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கப்படுகிறது. மேலும் பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 100% வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்படுகிறது.
ஆகையால் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி 14.11.2025 ஆகும். விண்ணப்பம் செய்யும் மாணவர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் குஜிலியம்பாறையில் (இருப்பு: KRK பேவர் பிளாக் கம்பெனி, கரிக்காலி பிரிவு அருகில், பாளையம் to குஜிலியம்பாறை, கரூர் மெயின் ரோடு) நேரில் சென்று விண்ணப்பத்தை பதிவு செய்து சேர்க்கை மேற்கொள்ளலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.50/- மற்றும் சேர்க்கை கட்டணம் ஓராண்டு தொழிற்பிரிவிற்கு ரூ.185/-, ஈராண்டு தொழிற் பிரிவிற்கு ரூ.195/- நேரில் செலுத்த வேண்டும். மேலும் 2021 ஆண்டில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 9-ஆம் வகுப்பு மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும். அதற்கு முந்தைய ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் 10-ஆம் வகுப்பு மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், குஜிலியம்பாறை அவர்களை அணுகி விவரங்களை கேட்டுக் கொள்ளலாம்.
அதிகபட்சகல்விதகுதிகள்
10th/12th/Diploma/Graduate & above
TWO YEAR TRADE:
1. ஜவுளி இயந்திரம் மிண்ணனுவியல் (Textile Mechatronics)
ONE YEAR TRADE:
1.உள்நிலை சரக்கு மேலாண்மை உதவியாளர் (Inplant Logistics Assistant)
2.கம்மீயர் டீசல் (Mechanic Diesel)
விண்ணப்பம் செய்ய தேவைப்படும் ஆவணங்கள்:
1.10thMarksheet (மதிப்பெண் சான்றிதழ்)
2.Transfer Certificate (மாற்றுச் சான்றிதழ்)
3.Commuity Certificate (சாதிச் சான்றிதழ்)
4.Aaadhar card, Photo
வயதுவரம்பு
1.ஆண்களுக்கு -14 முதல் 40 வயது வரை
2.பெண்களுக்கு-வயது வரம்பு இல்லை
மேலும் விபரங்களுக்கு 9994309861, 9600827733 மற்றும் 9442823440 ஆகிய கைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.