CHILD PROTECTION DEPT
செ.வெ.எண்:-38/2025
நாள்: 10.11.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையில் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் திண்டுக்கல் இரயில் நிலையம் குழந்தை உதவி மேசை அலுவலகத்திற்கு மேற்பார்வையாளர்-3 பணியிடங்கள், வழக்கு பணியாளர்கள்-3 பணியிடங்கள் மற்றும் பழனி பேருந்து நிலைய குழந்தை உதவி மேசை அலுவலகத்திற்கு மேற்பார்வையாளர்-1 பணியிடத்திற்கு முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குழந்தை உதவி மேசை (Child Help Desk)
1. மேற்பார்வையாளர்: பணியிடங்கள் : 04
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் சமூக பணி / கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பம் / சமூக சமூகவியல்/ சமூக அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அனுபவம் உள்ள விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை வழங்கப்படும். கணினியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவசர உதவி மையங்களில் பணிபுரிந்து அனுபவம் உள்ள பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம். 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். குழந்தை உதவி மையத்தில் ஏற்கனவே பணிபுரிந்தவராக இருந்தால் 52 வயது வரை இருக்கலாம். மாத தொகுப்பூதியமாக ரூ.21,000/- வழங்கப்படும்.
2. வழக்கு பணியாளர்: பணியிடங்கள் : 03
அங்கீகரிக்கப்பட்ட வாரியம் / சமமான வாரியத்தின் மூலமாக 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல தகவல் தொடர்பு திறன் இருத்தல் வேண்டும். அனுபவம் உள்ள விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை வழங்கப்படும். அவசர உதவி மையங்களில் பணிபுரிந்து அனுபவம் உள்ள பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம். 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். குழந்தை உதவி மையத்தில் ஏற்கனவே பணிபுரிந்தவராக இருந்தால் 52 வயது வரை இருக்கலாம். மாத தொகுப்பூதியமாக ரூ.18,000/- வழங்கப்படும்.
நிபந்தனைகள் :
1. மேற்கண்ட பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது.
2. மேற்கண்ட பணியிடத்திற்கு பணியமர்த்தப்படும் பணியாளர் நிர்வாக காரணங்களுக்காக எவ்வித முன்னறிவிப்புமின்றி பணி நீக்கம் செய்திட நிர்வாகத்திற்கு அதிகாரம் உள்ளது.
3. மேற்காணும் பணியிடத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்படும் பட்சத்தில் அப்பணிக்கான எவ்வித உரிமை கோரலையும் பணியாளர் கொண்டிருக்க மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட பணியிடத்திற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சுய சான்றொப்பமிடப்பட்ட கல்வி மற்றும் பணி அனுபவ சான்றிதழ் நகல்கள் இணைத்து விளம்பரம் வெளியிடப்பட்ட 15 வேலை நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், பிளசிங்ஸ், பிளாட் எண்.4, 2-வது குறுக்குத்தெரு (மாடி), எஸ்.பி.ஆர் நகர், மாவட்ட ஆட்சியரகம்(அஞ்சல்),திண்டுக்கல்–624004, தொலைபேசி எண்.0451-2904070 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்களோ அல்லது முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலோ அல்லது முறையான ஆவணங்கள் இணைக்கப்படாமல் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.