Close

Fisheries Dept

Publish Date : 13/11/2025

செ.வெ.எண்:-49/2025

நாள்: 12.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

திண்டுக்கல் மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அணைப்பட்டி மற்றும் பாலாறு பொருந்தலாறு அரசு மீன்குஞ்சு வளர்ப்பு பண்ணைகளில் இந்திய பெருங்கெண்டை மீன் இனங்களான கட்லா, ரோகு மற்றும் மிர்கால் இன மீன்குஞ்சுகள் சுமார் 16 இலட்சம் வளர்த்தெடுக்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்திட தயார் நிலையில் உள்ளது.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் மீன்வளர்ப்பு செய்து வரும் நீர்த்தேக்கம் மற்றும் குளங்களின் குத்தகைதாரர்கள், மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை மீன்வள விவசாயிகள் மற்றும் தனியார் மீன்பண்ணை மீன்வள விவசாயிகள் தங்களது மீன் பண்ணைகளுக்கு தேவையான இந்திய பெருங்கெண்டை மீன்களை தேவைக்கேற்ப அரசு நிர்ணயித்த குறைந்த விலையில் மீன்விரலிகள் கொள்முதல் செய்து பயனடைந்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், தகவலுக்கு அணைப்பட்டி மீன்வள சார் ஆய்வாளர் திருமதி மு.பாப்பத்தி அவர்களின் கைபேசி எண்-63748 26415 மற்றும் பழனி மீன்வள ஆய்வாளர் திருமதி மி.சாந்தி அவர்களின் கைபேசி எண்-75982 36815 ஆகிய கைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.