DDAWO DEPT
செ.வெ.எண்:-52/2025
நாள்:-13.11.2025v
திண்டுக்கல் மாவட்டம்
அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப் போட்டி வருகின்ற 21.11.2025-அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில் டிசம்பர் 03, 2025 அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப் போட்டி 21.11.2025-அன்று காலை 9.00 மணி முதல் ஓம் சாந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெறவுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியானது,
1. செவித்திறன் குறைபாடுடையோர்,
2. இயக்கத்திறன் குறைபாடுடையோர்,
3. அறிவுசார் குறைபாடுடையோர், புறவுலக சிந்தனையற்றோர், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோர்
4. பார்வைத்திறன் குறைபாடுடையோர்
ஆகிய நான்கு பிரிவுகளாகவும், வயது அடிப்படையில் மூன்று பிரிவுகளாக ஓவியப் போட்டிகள் நடத்தப்படும்.
i) 10 வயதிற்கு கீழ் – crayons and colour pencil,
ii) 11-18 வயது வரை – water colour போன்ற பொருட்கள்,
iii) 18 வயதிற்கு மேல் – தங்கள் விருப்பப்படி எந்த பொருள் வேண்டுமானாலும் பயன்படுத்தி ஓவியம் வரையலாம்
இப்போட்டிகள் நடத்த வேண்டிய விதிமுறைகள் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.
1. திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்தவர்கள் UDID/NIDC அடையாள அட்டை வைத்துள்ளவர்களாக இருக்க வேண்டும்.
2. வரைவதற்கான பொருட்கள், chart paper (A3 or A4 size) போன்றவற்றை மாற்றுத்திறனாளிகள் கொண்டு வரவேண்டும்.
3. ஓவியப் போட்டி கால அவகாசம் போட்டி துவங்கி 1 முதல் 2 மணி நேரம் வரை
ஆகும்.
4. மாற்றுத்திறனாளிகள் தங்கள் விருப்பப்பட்ட தலைப்பில் ஓவியம் வரையலாம்.
5. ஓவியப் போட்டியில் கலந்துக் கொள்ள விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் பெயர் விவரங்களை என்ற Google link ல் 19.11.2025-க்குள் பதிவு செய்ய வேண்டும்.
6. பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முற்பகல் மற்றும் பிற்பகல் எனப் பிரித்து போட்டிகள் நடத்தப்டும்.
7. மேற்குறிப்பிட்டவாறு வயதின் அடிப்படையில் நான்கு வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படும்.
8. ஓவியப் போட்டியில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்களுடன் முதல் பரிசாக ரூ. 2500/-, இரண்டாம் பரிசாக ரூ.1500/- மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.1000/- வழங்கப்பட உள்ளது.
எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் அனைத்து தகுதியான மாற்றுத்திறனாளிகள் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.