Flag Day
செ.வெ.எண்:- 13/2025
நாள்: 07.12.2025
திண்டுக்கல் மாவட்டம்
படைவீரர் கொடிநாள்-2025 நிதிவசூலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் நிதி வழங்கி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கான தேநீர் உபசரிப்பு நிகழ்ச்சியில் 17 பயனாளிகளுக்கு ரூ.4.00 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில், கொடிநாள் 2024 வசூல் தொகையாக ரூ.1,55,11,430 வசூல் செய்து வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(07.12.2025) படைவீரர் கொடிநாள்-2025 நிதி வசூலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் நிதி வழங்கி தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற முன்னாள் படைவீரர் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கான தேநீர் உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தொகுப்பு நிதியிலிருந்து 13 முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை மானியம் ரூ.3.05 இலட்சம், தனது ஒரு மகன் அல்லது ஒரு மகளை இராணுவப் பணிக்கு அனுப்பிய பெற்றோருக்கு போர்ப்பணி ஊக்க மானியமாக ஒருவருக்கு ரூ.20,000 மற்றும் மூன்று முன்னாள் படைவீரர்களின் மகள்களுக்கு திருமண மானியம் ரூ.75,000 என ஆக மொத்தம் 17 பயனாளிகளுக்கு ரூ.4.00 இலட்சம் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட மகன் அல்லது மகளை இராணுவப் பணிக்கு அனுப்பிய பெற்றோருக்கு போர்ப்பணி ஊக்க மானியம் பெற்ற ஒரு பெற்றோருக்கு வெள்ளிப் பதக்கம் ஆகிய நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:-
முன்கள பணியாளர்களாக விளங்கக்கூடிய இராணுவ வீரர்களுக்கு மதிப்பளிக்கவும், அவர்களுடைய அர்பணிப்பையும், அங்கீகாரத்தையும் போற்றும் வகையில் இந்தியா முழுவதும் இன்று கொடிநாள் தினமாக நினைவு கூர்ந்து வருகின்றோம். ஒரு நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் சமூக பொருளாதாரம் எந்த அளவிற்கு முக்கியமோ அதே போன்று அதற்கு அடித்தளமாக அமைவது ஒரு நாட்டின் பாதுகாப்பு ஆகும். பல்வேறு ஊடகங்களின் வாயிலாக தெரிய வருவது என்னெவென்றால் பல்வேறு நாடுகளில் ஒரு நிச்சயமற்ற செயல் மற்றும் அசாதார்னமான சூழல் நடைபெறுவதன் காரணமாகத்தான் அந்த நாட்டின் வளர்ச்சி மற்றும் வாழ்வாதாரம் ஒரு கேள்விகுறியாக இருந்து வருகிறது.
ஆனால் இந்தியாவில் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்த குடும்பத்தினர்கள் மற்றும் முன்னாள் இராணுவத்தினர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் நமது இந்தியா சுதந்திரம் அடைந்து கடந்த 75 ஆண்டுகளை கடந்தும் கூட இதுவரைக்கும் இராணுவத்தினருக்கான எந்த ஒரு அசாதார்ன நிலை இதுவரைக்கும் வந்தது இல்லை. இதற்கு முக்கிய காரணம் முப்படைகளின் பங்களிப்பு தான். நமது நாட்டின் எல்லையை பாதுகாப்பது மற்றும் அன்னிய நாட்டு அச்சுறுத்தலிருந்து நாட்டை பாதுகாப்பதில் திறன்மிக்கதாக செயல்பட்டு வருகின்றனர்கள். ஒரு நாட்டின் திட்டமிடுதலுக்கு மிகவும் முக்கியமானது நாட்டின் பாதுகாப்பு. எல்லையில் பாதுகாத்தும் அளப்பரிய தியாகம் செய்யும் படைவீரர்களை கவுரவிக்கும் வகையிலும், வீரர்களின் குடும்பத்தினரை பாதுகாக்க வேண்டியதும் நமது கடமையாகும். நம் இராணுவ வீரர்கள் நமது நாட்டை பாதுகாப்பது போல அவர்களின் குடும்பங்களை நாம் பாதுகாக்க வேண்டும். முன்னாள் படைவீரர்களின் குடும்பங்களை பாதுகாப்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காக்கும் கரங்கள் என்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். முன்னாள் படைவீரர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்றாண்டு முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் 300-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. நம் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்கள் மீது காட்டும் அன்பின் இலக்கணமாகவும், இது ஒரு பொன்னான வாய்ப்பாகவும் கருதி, பொதுமக்கள் கொடிநாள் நன்கொடைகளை அதிக அளவில் வழங்கிட வேண்டும். சென்ற ஆண்டு அனைத்து துறையினர்களும் அவர்களின் குடுபத்தினருக்கு எந்த அளவிற்கு ஒத்துழைப்பு கொடுத்தமோ அந்த அளவிற்கு இந்த ஆண்டும் அனைத்து துறையினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினர் வழங்கும் கோரிக்கை மனுக்களை துறை சார்ந்த அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு பல்வேறு நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. முப்படைகளில் பணியாற்றும் வீரர்களுக்கு அரசு அலுவலர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் நல்ல மதிப்பு உள்ளது. ராணுவத்தில் பணியாற்றி வருவோருக்கும், ஓய்வு பெற்றோரின் கோரிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக, இரண்டாம் உலகப்போரில் பணியாற்றிய 100 வயது கடந்த முன்னாள் படைவீரர் திரு.கே.சுந்தரராஜன் அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகள் வழங்கி, கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.ர.கீர்த்தனா மணி, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் (கூ.பொ) திருமதி ச.சுகுணா, ஆர்மி கேண்டீன் மேலாளர் முன்னாள் கேப்டன் திரு.கணேஷ் மூர்த்தி, அரசு அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.