Close

Reorganization of village panchayats

Publish Date : 17/12/2025

செ.வெ.எண்:-46/2025

நாள்:-17.12.2025

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

அரசாணை (நிலை) எண்-344, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (ப.ரா-2(1)) துறை நாள்: 05.12.2025-ன் படி, திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 306 கிராம ஊராட்சிகளில் 02 கிராம ஊராட்சிகளை பிரித்து 04 கிராம ஊராட்சிகளாக மறுசீரமைப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை திண்டுக்கல் மாவட்ட அரசிதழில் சிறப்பு வெளியீடாக 08.12.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி கிராம ஊராட்சிகளைப் பிரித்து உருவாக்கப்படும் புதிய கிராம ஊராட்சிகள் அடுத்து வரும் சாதாரண தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும் எனவும், அந்த உள்ளூர் ஊராட்சி பகுதிகளில் குடியிருந்து வருகின்ற எவரும் திண்டுக்கல் மாவட்ட அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து நான்கு வாரங்களுக்குள் இந்த அறிவிக்கை குறித்த மறுப்பினை தெரிவிக்க விரும்பினால் அவர் எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு அந்த உள்ளூர் ஊராட்சி பகுதிகளில் குடியிருந்து வருகின்ற எவரிடமிருந்தும் மேலே கூறப்படும் காலக்கெடுவிற்குள் மறுப்பு எதும் பெறப்பட்டால் அதனை உரிய பரிசீலனை செய்து தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.