Close

Aadhar Card Camp – Ext

Publish Date : 09/12/2024

செ.வெ.எண்:-18/2024

நாள்:-07.12.2024

திண்டுக்கல் மாவட்டம்

நத்தம் வட்டத்தில் புதியதாக ஆதார் அட்டை எடுத்தல், ஆதார் அட்டை திருத்தம் மற்றும் புதுப்பித்தல் தொடர்பாக சிறப்பு முகாம்கள் 14.12.2024 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டத்தில் புதியதாக ஆதார் அட்டை எடுத்தல், ஆதார் அட்டை திருத்தம் மற்றும் புதுப்பித்தல் தொடர்பாக சிறப்பு முகாம்கள் 29.11.2024 முதல் (ஞாயிறுக்கிழமை நீங்கலாக) 07.12.2024 வரை காலை 10.30 மணி முதல் மாலை 04.30 மணி வரை தொடர்ச்சியாக 8 தினங்களில் நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி எம்.எஸ் 158 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் நத்தம் பேரூராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, அதன்படி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சிறப்பு முகாம்கள் மேற்படி இடங்களில் 09.12.2024 முதல் 14.12.2024-ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனவே, மேற்படி முகாமிற்கு பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.