AD Fisheries-PMMKSSY-NFDB
செ.வெ.எண்:-52/2025
நாள்:-19.02.2025
திண்டுக்கல் மாவட்டம்
மீன் வளர்க்கும் விவசாயிகள், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள் தேசிய மீன்பிடி டிஜிட்டல் தளம் மற்றும் மீனவர் நலவாரியத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள், மீன் விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் மற்றும் மேம்படுத்தப்பட்ட சேவை வழங்குவதற்காகவும் அவர்களது ஆதார் எண் தொலைபேசி எண் மற்றும் நிரந்தர கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை சுயமாக தங்களது அலைபேசியின் வாயிலாகவோ அல்லது பொதுசேவை மையத்தின் மூலமாகவோ தேசிய மீன் பிடி டிஜிட்டல் தளத்தில் (NFDB) பதிவு செய்திட வேண்டும்.
மேலும், தமிழ்நாடு மீனவர் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராக உள்ள நபர்கள் மற்றும் மீன் சார்ந்த தொழில் செய்யும் அனைத்து விவசாயிகளும் ஆதார் அட்டை நகல், குடும்ப அடையாள அட்டை நகல், வங்கி கணக்குப் புதத்தக நகல், புகைப்பட நகல்-2 ஆகியவற்றுடன் மீனவர் நலவாரியத்தில் பதிவு செய்து நலவாரிய நிவாரணங்களை பெற்று பயன்பெறலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மீன் வளர்க்கும் விவசாயிகள், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள், நல வாரியம் மற்றும் PMMKSSY திட்டத்தில் பயன்பெற “மீன் வளம் மற்றும் மீனவர் நலஉதவி இயக்குநார் அலுவலகம், பி4, 63, 80 அடி ரோடு, நேருஜி நகர், திண்டுக்கல் – 624001“ என்ற அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்: 0451 – 2900148, மீன்வள ஆய்வாளர் மற்றும் சார் ஆய்வாளர் கைபேசி எண்கள் 9751664565, 9750430221, 9943366375 ஆகியவை வாயிலாக தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.