Close

AD Handlooms 10 NHD-kodaikanal

Publish Date : 08/08/2024
.

செ.வெ.எண்:-16/2024

நாள்:-07.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் தேசிய கைத்தறி தின விழாவை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் கைத்தறி துறை சார்பில் 10-வது தேசிய கைத்தறி தின விழாவை கொண்டாடும் வகையில், கைத்தறி இரகங்களை பிரபலப்படுத்துதல் மற்றும் சிறப்பு கைத்தறி கண்காட்சியை அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர்.பி. ஷீலா அவர்கள், கைத்தறித்துறை உதவி இயக்குநர் திருமதி தெ.மேகலா முன்னிலையில் இன்று(07.08.2024) தொடங்கி வைத்தார்.

2015-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி அன்று சுதேசி இயக்கத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய கைத்தறி தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 10-வது தேசிய கைத்தறி தின விழாவை கொண்டாடும் வகையில், கைத்தறி இரகங்களை பிரபலப்படுத்துதல் மற்றும் சிறப்பு கைத்தறி கண்காட்சி கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

கண்காட்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும், மென்பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், கோரா காட்டன் சேலைகள், செயற்கை பட்டு சேலைகள், Tie & Dye காட்டன் சேலைகள், பம்பர் காட்டன் சேலைகள் உள்ளிட்ட கைத்தறி ஜவுளி ரகங்கள் காட்சிப்படுத்துத்தப்பட்டு விற்பனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் போது, கைத்தறி நெசவாளர்களுக்கு முத்ரா கடன் திட்டத்தின் கீழ் கடன் தொகைக்கான ஒப்பளிப்பு ஆணைகள், கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் தறி உபகரணங்கள் மற்றும் நெசவாளர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணி ஆணைகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், பேராசிரியர்கள், கைத்தறித்துறை அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.