Close

AD skill Private Candidate Exam

Publish Date : 09/09/2024

செ.வெ.எண்:-14/2024

நாள்:-07.09.2024

திண்டுக்கல் மாவட்டம்

அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்துகொள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ், தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் (NCEVT) 2025–ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக (Private Candidates) கலந்துகொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து தேர்வுக்கட்டணம் (ரூ.200) செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள திண்டுக்கல், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய (Nodal Govt. ITI) முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதனிலைத்தேர்வுகள் கருத்தியல் (Theory) தேர்வு 15.10.2024 அன்றும் மற்றும் செய்முறை (Practical) தேர்வு 16.10.2024 ஆகிய தேதிகளில் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். இதற்கான முழு வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம். தனித்தேர்வராக தேர்வு எழுத விண்ணப்பிக்க கடைசிதேதி 18.09.2024 ஆகும்.

மேலும் விபரங்களுக்கு திண்டுக்கல், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை நேரில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.