AD SKILL TRAINING DINDIGUL(Admission 2025)
செ.வெ.எண்:-57/2025
நாள்:-15.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
2025-ஆம் ஆண்டிற்கான அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
2025-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்புவோர் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 30.09.2025 வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும், விபரங்களுக்கு திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்-9965291516, திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்)- 9499055763, ஒட்டன்சத்திரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் – 9025155088, குஜலியம்பாறை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் – 9600827733, திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் – 0451-2970049 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
மேலும், மேற்கண்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர ஆண்களுக்கான வயது வரம்பு 14 முதல் 40 வயது வரையும், மகளிருக்கு உச்ச வயது வரம்பு இல்லை, மாதந்தோறும் உதவித்தொகை ரூபாய் 750/-யும், தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000/-யும், விலையில்லா பாட புத்தகம், சீருடை, மிதிவண்டி, வரைபட கருவிகள் மற்றும் மூடுகாலணிகள், இலவசபேருந்து பயண அட்டை, விலையில்லா சீருடை மற்றும் ஆண்டுதோறும் தையற்கூலி, மத்திய அரசின் NCVT சான்றிதழ். கட்டணமில்லா உணவுடன் கூடிய தங்கும் விடுதி வசதி ஆகிய சிறப்பம்சங்கள் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.