Agri Grievance – Dindigul RDO office
செ.வெ.எண்:-07/2024
நாள்:-03.07.2024
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 08.07.2024 அன்று வேளாண் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் வருவாய் கோட்டத்தில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 08.07.2024 அன்று முற்பகல் 11.00 மணி முதல் 12 மணி வரை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் வேளாண் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் வேளாண் சார்ந்த சங்கங்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கைகள் மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை அளித்து, தீர்வு கண்டு பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.