Close

AGRICULTURAL MACHINERY MELA

Publish Date : 28/08/2024

செ.வெ.எண்:-73/2024

நாள்: 26.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 29.08.2024 அன்று நடைபெறவுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம் 29.08.2024 அன்று காலை 10.30 மணி முதல் 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இம்முகாமில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து விவசாயிகள், தனியார் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொறியாளர்களுடனும், அலுவலர்களுடனும் நேரில் கலந்துரையாடி விளக்கம் பெறலாம்.

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இயக்குதல் மற்றும் பராமரித்தல், செய்யக் கூடியது மற்றும் செய்யக் கூடாதவை, பழுதுகளைக் கண்டறிதல், உதிரிபாகங்கள் குறித்த தெளிவுரை, மசகு எண்ணெய் மற்றும் உயவுப் பொருட்கள் பயன்பாடு பற்றி விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் விளக்கம் அளிக்கப்படவுள்ளது. டிராக்டர்கள் மற்றும் உபகரணங்களை விவசாயிகள் கையாண்டு இயக்கிட வழிவகை செய்யப்படும். வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் திறன்மிகு இயக்கம் மற்றும் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ளும் ஆர்வமுள்ள இளைஞர்களை, இத்துறையால் நடத்தப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் சேர்ந்து பயன்பெற ஊக்குவிக்கப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.