Agriculture marketing APEDA
செ.வெ.எண்:-38/2025
நாள்:-20.01.2025
திண்டுக்கல் மாவட்டம்
விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வேளாண் விளைப்பொருள்களை ஏற்றுமதி மேற்கொள்வதற்கான சான்றிதழ்களைப் பெறுவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.15000 பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
மா, தென்னை, சிறுதானியங்கள், முருங்கை, மஞ்சள், சின்னவெங்காயம் மற்றும் வெள்ளரி போன்றவற்றைப் சாகுபடி செய்யும் ஆர்வமுள்ள விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், 01.04.2024 தேதிக்கு பிறகு ஏற்றுமதி குறித்தான சான்றிதழ்களான இறக்குமதி, ஏற்றுமதி குறியீடு(IE Code), பதிவு மற்றும் உறுப்பினர் சான்றிதழ் (Registration membership Certificate), டிஜிட்டல் கையொப்பம், FSSAI மத்திய உரிமம், போன்றவற்றிற்கான ரசீது சமர்ப்பித்தால், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம்(DGFT), வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள் ஏற்றுமதி ஆணையம்(APEDA) போன்ற ஏற்றுமதி நிறுவனங்களின் ஆலோசனையின் பேரில் அதிகபட்சம் ரூ.15,000 பின்னேற்பு மானியமாக தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும்.
எனவே, ஏற்றுமதியில் ஆர்வமுள்ள விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இத்திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ளலாம். இதுதொடர்பாக வேளாண் துணை இயக்குநர், வேளாண் வணிகம், திண்டுக்கல் 9442060637 மற்றும் வேளாண்மை அலுவலர்கள் 9787241890, 6383691886, 6383639322 ஆகியோரை சம்பந்தப்பட்ட கைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களையும், ஏற்றுமதிக்கான வழிமுறைகளையும் பெற்றுக் கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.