Close

Agriculture-Special & Rabi Special camp

Publish Date : 04/12/2024

செ.வெ.எண்:-83/2024

நாள்:-30.11.2024

திண்டுக்கல் மாவட்டம்

ராபி பருவத்தில், நெல், சோளம் மற்றும் நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் எற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிறப்பு மற்றும் ராபி பருவத்தில், நெல்–II, சோளம் மற்றும் நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம்

நடப்பு ஆண்டு இத்திட்டத்தினை திண்டுக்கல் மாவட்டத்தில் SBI General Insurance Company Ltd., நிறுவனமானது செயல்படுத்துகிறது. இதனைத் தொடர்ந்து சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் மொத்தமாக 163 குறு வட்டங்கள் பயிர்காப்பீட்டு பதிவிற்காக அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கடன்பெறும் விவசாயிகள், அவர்கள் கடன்பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் விருப்பத்தின் அடிப்படையில் பதிவு செய்து கொள்ளலாம் . கடன்பெறா விவசாயிகள், பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவே விருப்பத்தின் பேரில் பதிவு செய்யலாம்.

அதிக அளவில் விவசாய பெருமக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தில் டிசம்பர் 1 முதல் 7-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் சம்பந்தப்பட்ட பயிர் காப்பீட்டு நிறுவனமான SBI General Insurance Company Ltd., மூலம் நடத்தப்பட உள்ளது. எனவே அனைத்து விவசாய பெருமக்களும் இந்த வாய்ப்பினை தவறவிடமால் தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயன்பெற கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

அதன்படி, 01.12.2024 மற்றும் 02.12.2024 ஆகிய நாட்களில் தொப்பம்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரத்திலும், 03.12.2024 அன்று பழனி மற்றும் குஜிலியம்பாறையிலும், 04.12.2024 அன்று ரெட்டியார்சத்திரம் மற்றும் வேடந்தூரிலும், 05.12.2024 அன்று ஆத்தூர், நிலக்கோட்டை மற்றும் வத்தலக்குண்டு, 06.12.2024 அன்று திண்டுக்கல் மற்றும் சாணார்பட்டியிலும், 07.12.2024 அன்று வடமதுரை மற்றும் நத்தம் ஆகிய பகுதிகளில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இத்திட்டத்தில் அனைத்து பயிர்களுக்கும் காப்பீட்டு பதிவிற்கான காலக்கெடு முடிவடையும் தருவாயில் இருப்பதனால், விரைந்து பதிவுகள் மேற்கொள்ள அனைத்து விவசாயிகளுக்கும் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

சிறப்பு மற்றும் ராபி பருவத்தின் கீழ் பதிவு செய்ய திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து பயிர்களுக்கும் பயிர் வாரியான அடங்கலுடன் பயிர் காப்பீடு பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல்-II, சோளம் மற்றும் நிலக்கடலை பயிரானது 16.12.2024-ம் தேதியும் பயிர் காப்பீட்டிற்கான பதிவுகள் மேற்கொள்ள இறுதி நாளாக அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

மேலும், நெல்-II ஏக்கருக்கு ரூ.534 பிரிமியமாக செலுத்தும் விவசாயிகளுக்கு ரூ.35,600 தோராயமாக பயிர் காப்பீட்டு தொகைவும், சோளம் ஏக்கருக்கு ரு.165 பரிமியமாக செலுத்தும் விவசாயிகளுக்கு ரூ.11,000 தோராயமாக பயிர் காப்பீட்டு தொகைவும், நிலக்கடலை ஏக்கருக்கு ரூ.397.50 பிரிமியமாக செலுத்தும் விவசாயிகளுக்கு ரூ.26,500 தோராயமாக பயிர் காப்பீட்டு தொகைவும் கிடைக்கும்.

மேலும், கூடுதல் தகவலுக்கு, அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம். அறிவிக்கப்பட்ட இறுதி நாளுக்கு முன்பாக வெள்ளம் மற்றும் புயல் ஏற்படும் பட்சத்தில் பயிர் சேதம் அடைந்தால் பயிர் காப்பீடு செய்ய அன்றே இறுதி நாளாகும்.

எனவே, விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் சிட்டா மற்றும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டண தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி தெரிந்து கொள்ளலாம் இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.