Close

Anbukarangal

Publish Date : 04/10/2025

செ.வெ.எண்:-115/2025

நாள்:-29.09.2025

திண்டுக்கல் மாவட்டத்தில் ”அன்புக்கரங்கள்” திட்டத்தின் மூலம் மாதம் ரூ.2000 பெற்ற குழந்தைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் (15.09.2025) அன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கிடும் ”அன்புக்கரங்கள்” திட்டத்தை தொடங்கி வைத்து, அக்குழந்தைகளுக்கு உதவித் தொகையினை வழங்கினார்.

பெற்றோர்கள் இருவரையும் இழுந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர ”அன்புக்கரங்கள்” என்ற திட்டத்தின் மூலம் மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் அனைத்து மாவட்டத்திலும், 2012ஆம் ஆண்டு முதல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகமானது குழந்தைகள் நலனுக்காக செயல்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, இளைஞர் நீதிச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்று 25 குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இப்பராமரிப்பு நிறுவனங்களில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் 288 ஆண் குழந்தைகள் மற்றும் 452 பெண் குழந்தைகள் என மொத்தம் 740 குழந்தைகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

கொரோனா பெருந்தொற்று காராணமாக பெற்றோர் இருவரையும் இழந்த 13 குழந்தைகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கொரோனா நிவாரண நிதியாக தலா ரூ.5,00,000/- மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்த 357 குழந்தைகளுக்கு தலா ரூ.3,00,000/- என மொத்தம் ரூ. 11,36,00,000/- வழங்கப்பட்டுள்ளது. மேலும், பெற்றோர் இருவரையும் இழந்து பாதுகாவலர் வசம் வளரும் 13 குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை மாதாந்திர பராமரிப்பு நிதியாக ரூ.3,000/- வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய தத்துவள ஆதார முகமை (CARA) இணையதளத்தில் குழந்தை வேண்டி பதிவேற்றம் செய்துள்ள பெற்றோர்களுக்கு, பதிவு மூப்பின் அடிப்படையில் காந்திகிராமம், சிறப்பு தத்து மையத்தில் பராமரித்து வந்த 41 குழந்தைகளை தற்காலிக தத்து வழங்கி, பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மூலமாக தத்து பெற்றோர்களுக்கு விசாரணை நடத்தப்பட்டு, நிரந்தர தத்து ஆணை வழங்கப்பட்டது.

நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 2012 முதல் மார்ச் 2025 வரை 148 குழந்தைகள் தெரிவு செய்யப்பட்டு 3 வருடத்திற்கு அல்லது 18 வயது நிறைவடையும் வரை நிதி ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 2025 முதல் தற்போது வரை 101 குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். இதுவரை இத்திட்டத்தின் கீழ் 249 குழந்தைகளுக்கு (மார்ச் 2022 வரை மாதம் ரூ.2,000/- மற்றும் ஏப்ரல் 2022 முதல் மாதம் ரூ.4,000/-) ரூ.1,50,64,000/- வழங்கப்பட்டுளள்து.

மாநில நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் அக்டோபர் 2021 முதல் செப்டம்பர் 2024 வரை 34 குழந்தைகள் தெரிவு செய்யப்பட்டு மாதம் ரூ.2,000/- வீதம் 3 வருடத்திற்கு நிதி ஆதரவு ரூ.19,64,000/- வழங்கப்பட்டுள்ளது.

தற்காலிக வளர்ப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ் குழந்தை வேண்டி பதிவு செய்துள்ள பெற்றோர்கள் குறித்து இல்லக் களவிசாரணை மேற்கொள்ளப்பட்டு தகுதி வாய்ந்த 14 பெற்றோர்களுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் 16 குழந்தைகள் தெரிவு செய்து குழந்தைகள் நலக்குழுவின் மூலம் ஆணை பிறப்பிக்கப்பட்டு வளர்ப்பு பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நிதி ஆதரவு (பிற்காப்பு) அடிப்படையில் குழந்தைகள் இல்லத்தில் தங்கி பள்ளி கல்வியை முடித்துவிட்டு 18 வயது நிறைவடைந்த இளைஞர்/இளைஞ்களின் எதிர்கால நலனுக்காக மார்ச் 2022 வரை ரூ.2,000/-வழங்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 2022 முதல் ரூ.4,000/- வீதம் 21 வயது பூர்த்தியடையும் வரை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை இத்திட்டத்தின் கீழ் 35 இளைஞர்/இளைஞிகளுக்கு ரூ.17,70,000/-வழங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, மிகவும் வறிய நிலையில் உள்ள சுமார் 50,000 குடும்பங்களில், குழந்தைகள், தங்கள் இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வருவது தெரிய வந்துள்ளது. தாயுமானவரின் அன்புகரங்கள் திட்டத்தில் இக்குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், இக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி அவர்கள் கல்வியைத் தொடர மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகையும், பள்ளிப் படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 15.09.2025 அன்று திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் ”அன்புக்கரங்கள்” திட்டத்தை தொடங்கி வைத்து, முதற்கட்டமாக 191 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000/- உதவித் தொகையினை வழங்கினார்.

”அன்புகரங்கள்” திட்டத்தின் மூலம் மாதம் ரூ.2000 பெற்று பயனடைந்த மாணவி கு.கீர்த்திகா தெரிவித்ததாவது:-

என் பெயர் கு.கீர்த்திகா நான் நத்தம், பன்னுவார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறேன். எனது தாயார் 9 மாதத்திற்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தந்தையும் 1 மாத இடைவெளியில் தற்கொலை செய்து கொண்டார்.

எனது. அக்கா பன்னவார்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நான் எனது தாத்தா மற்றும் பாட்டியின் வீட்டில் தங்கி நான் படித்து வருகிறேன். மிகவும் ஏழ்மையான நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரால் அன்புக்கரங்கள் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.2000 தற்போது பெற்று வருகிறேன்.

எனது பாட்டி வீட்டில் தங்கி படிக்கும் எனக்கு ”அன்புக்கரங்கள்” திட்டத்தின் மூலம் கிடைக்கும் ரூ.2000 என்னை பராமரிக்க இந்த தொகை எனது பாட்டிக்கு பயனுள்ளதாக இருக்கும். தற்போது தமிழ்நாடு முதலமைச்சரால் ”அன்புக்கரங்கள்” திட்டத்தின் மூலம் மாதம் ரூ.2000 தருவதால் எனது சிறு சிறு செலவுகளை பார்த்து கொள்வதோடு, செலவு போக மீதி இருக்கும் பணத்தை சேமித்து வைத்துக்கொள்கிறேன். தாய், தந்தையை இழந்த நிலையில் என் கல்வி பாதித்து விடுமோ என்ற பயம் இருந்த நிலையில் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளின் கல்வி எந்த விதத்திலும் பாதித்துவிடக் கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் ”அன்புக்கரங்கள்” திட்டத்தின் மூலமாக மாதம் ரூ.2000 வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

”அன்புகரங்கள்” திட்டத்தின் மூலம் மாதம் ரூ.2000 பெற்று பயனடைந்த மாணவன் ஆ.சங்கர் தெரிவித்ததாவது:-

என் பெயர் ஆ.சங்கர், நான் குஜிலியம்பாறை வட்டம். உல்லியக்கோட்டை கிராமத்தை சேர்ந்த நான் உல்லியக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 7ஆம் படித்து வருகிறேன்.

எனது தந்தை 10 வருடத்திற்கு முன்பு எனது தாயை விட்டு பிரிந்த சென்று விட்டார் எங்கு உள்ளார் என்று இதுவரை தெரியவில்லை. எனது தாயார் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் 5 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். எனது மூத்த சகோதர் ஆ.பிரேம் குமார் திண்டுக்கல், கோவிந்தாபுரத்தில் உள்ள தனது அத்தையின் பராமரிப்பில் தங்கி திண்டுக்கல், பழனி சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

நான் எனது 90 வயதான தந்தை வழி பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறேன். என்னை பராமரிக்க எனக்கு தமிழ்நாடு முதலமைச்சரால் அன்புக்கரங்கள் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.2000 வழங்கப்படும் தொகை பயனுள்ளதாக இருகிறது. இதனால் என்னால் பள்ளியிலும் சகமாணவர்களிடமும் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. என் கல்விக்காக தந்தையாக இருந்து மாதம் ரூ.2000 வழங்கும் தமிழ்நாடு முதலமைச்சரருக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளின் கல்வி எந்த விதத்திலும் பாதித்துவிடக் கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் ”அன்புக்கரங்கள்” திட்டத்தின் மூலமாக மாதம் ரூ.2000 வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.