Animal Husbandry Department – Meeting
செ.வெ.எண்:-81/2024
நாள்:-29.11.2024
திண்டுக்கல் மாவட்டம்
பிராணிகள் வதை தடுப்புச் சங்க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிராணிகள் வதை தடுப்புச் சங்க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
அனைத்து வகையான விலங்குகளையும் வதை செய்வதில் இருந்து தடுத்தல். போக்குவரத்து விதிகளுக்கு புறம்பாக கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லும், வாகனத்தின் உரிமையாளர் மற்றும் கால்நடைகளின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றங்களின் மூலமாக தண்டனை மற்றும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுத்தல். சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகின்ற இறைச்சிக் கடைகளை மாநகராட்சி மற்றும் பிறத்துறைகளுடன் இணைத்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல். சாலையோரங்களில் விபத்துக்குள்ளானது மற்றும் அனாதையாக துன்பப்படும் விலங்குகளை மீட்டு உரிய சிகிச்சை அளித்து மீண்டும் உரிய இடத்தில் கொண்டு சென்று சேர்த்தல். அரசு ஆணை பெற்று நடைபெறுகின்ற அனைத்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விதி மீறல் நடைபெறுகிறதா என்பதை கண்காணித்தல். பொது மக்கள் மற்றும் விலங்குள் நல ஆர்வலர்கள் மாவட்ட மாநில நிர்வாகத்திற்கு வருகின்ற புகார்களின் அடிப்படையில் பிராணிகள் வதை குறித்த நடவடிக்கை எடுத்தல். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செல்லப்பிராணிகள் விற்பனை நிலையங்களை ஆய்வு செய்து முறையாக உரிமம் பெற்று நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளுதல் மேலும், நாய்களுக்கான குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை கண்காணிப்புக் குழுவில் உறுப்பினராக இருந்து முனைப்புடன் செயல்படுத்துதல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் விலங்குகள் நலன் மற்றும் வெறிநோய் தடுப்பு பற்றி விழிப்புணர்வு முகாம் நடத்துதல், Illegal Tansport மற்றும் Illegal Slaughter குறித்து துண்டு அறிக்கை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், கொடைக்கானல் பகுதியில் உள்ள அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் வெறிநோய் தடுப்பூசி முகாம் திண்டுக்கல் SPCA மற்றும் கொடைக்கானல் KSPCA இணைந்து நடத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 14 Block-களில் செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய். தடுப்பூசி முகாம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மண்டல இணை இயக்குநர் மரு மா.ச.இராஜா. துணை இயக்குநர் மரு. பெ. நா. இராம்நாத், உதவி இயக்குநர்கள், துணை நிர்வாக செயலாளர் மரு வி.சரவணக்குமார், நிருவாக குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.