Animal Husbandry – RDVK camp
செ.வெ.எண்:-65/2025
நாள்:-28.01.2025
திண்டுக்கல் மாவட்டம்
கோழிக்கழிச்சல் நோய்த் தடுப்பூசி இருவார சிறப்பு முகாம் 01.02.2025 முதல் 14.02.2025 வரை நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
ஒவ்வொரு ஆண்டும் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் பிப்ரவரி மாதம் கோழிக்கழிச்சல் நோய்த் தடுப்பூசி இருவார சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் 01.02.2025 முதல் 14.02.2025 வரை இந்த முகாமானது அந்தந்த ஊராட்சிகளுக்கு உட்பட்ட கால்நடை நிலையங்களில் நடைபெற உள்ளது.
எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோழி வளர்க்கும் பயனாளிகள் அனைவரும் அவர்களது கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள கால்நடை நிலையங்களில் தங்கள் கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் நோய்த் தடுப்பூசி செலுத்தி, நோய் தாக்குதல் வராமல் பாதுகாத்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.