Close

Book Festival (Dindigul is Reading)

Publish Date : 23/08/2025
.

செ.வெ.எண்:-79/2025

நாள்:-20.08.2025

திண்டுக்கல் மாவட்டம்

12-வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் எம்.வி.எம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5000 கல்லூரி மாணவிகள் பெருந்திரளாகப் பங்கேற்கும் ”திண்டுக்கல் வாசிக்கிறது” நிகழ்வு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 12-வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் எம்.வி.எம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5000 கல்லூரி மாணவிகள் பெருந்திரளாகப் பங்கேற்கும் திண்டுக்கல் வாசிக்கிறது நிகழ்வு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(20.08.2025) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் 12-ஆவது புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் செப்டம்பர் 7-ஆம் தேதி முடிய திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 12-வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் எம்.வி.எம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5000 கல்லூரி மாணவிகள் பெருந்திரளாகப் பங்கேற்கும் ”திண்டுக்கல் வாசிக்கிறது” நிகழ்ச்சி தொடங்குகிறது. மேலும், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இந்நிகழ்ச்சியை முன்னிலைப்படுத்தி மாவட்டத்தில் உள்ள 1986 பள்ளிகளில் சுமார் 3 இலட்சம் மாணவ, மாணவியர், 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 50,000-க்கும் அதிகமான மாணவ, மாணவியர் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களில் உள்ள அலுவலர்கள்/பணியாளர்கள் ”திண்டுக்கல் வாசிக்கிறது” நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

நிழலின் அருமை வெயிலின்போது தெரியும் என்பது போல, அறியாமையில் சிக்கி உழலும் போது அறிவின் பெருமை நமக்கு தெரியும். அறிவின் தொடக்கம் புத்தகம் வாசிப்பு ஆகும். கல்வியில் புத்தகம் முக்கிய பங்கு வகிக்கிறது. புத்தக வாசிப்பு நமது வாழ்க்கையை செழுமையாக்கும், செம்மைப்படுத்தும். ஒரு தலைமுறையையே சிறப்பாக மாற்றும் வல்லமை புத்தகத்தின் வழியாகவே தொடங்கும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இலக்கியக் கள நிர்வாகிகள் பேராசிரியர் முனைவர் ரெ.மனோகரன், எம்.வி.எம் கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் க.லட்சுமி, எம்.வி.எம் அரசினர் மகளிர் கலை (ம) அறிவியல் கல்லூரி, புனித அந்தோணியார் மகளிர் கலை (ம) அறிவியல் கல்லூரி, ஜி.டி.என் கலைக் கல்லூரி மற்றும் சக்தி கலை (ம) அறிவியல் கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டு திருக்குறள் வாசித்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

default

.

default