Close

Book Festival_Anbu Puthaga Petti

Publish Date : 02/09/2025
.

செ.வெ.எண்:-110/2025

நாள்: 30.08.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் இலக்கிய களம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 12 வது புத்தகத் திருவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் மாணவர்கள் புத்தகங்கள் வாசிப்பை ஊக்குவித்திடும் வகையில் “அன்பு புத்தகப் பெட்டி” என்ற புதிய திட்டத்தை துவக்கி வைத்தார்கள்

திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொதுநூலக இயக்ககம் மற்றும் இலக்கியக் களம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 12 வது புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (30.08.2025) பார்வையிட்டு மாணவர்கள் புத்தகங்கள் வாசிப்பை ஊக்குவித்திடும் வகையில் “அன்பு புத்தகப் பெட்டி” என்ற புதிய திட்டத்தை துவக்கி வைத்து பார்வையிட்டு புதிய புத்தகங்களை அன்பு புத்தகப் பெட்டகத்தில் இட்டார்கள்.

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் 12-வது புத்தகத்திருவிழாவில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும், இலக்கிய களத்தின் சார்பாகவும், பொது நூலக இயக்ககத்தின் சார்பாகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த 12 வது புத்தகத் திருவிழாவில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு புதிய முயற்சிகளை எடுத்துள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளும் மற்றும் பொதுமக்களும் இந்த புத்தகத்திருவிழாவில் கலந்து கொண்டு அதிகளவில் இந்த புத்தகங்களை படித்தும் மற்றும் வாங்கியும் பயன்பெறும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி குழந்தைகள், சிறார்களுக்கான சிறப்பு அரங்கங்கள், வண்ணம் தீட்டுதல், பொம்மைகள் செய்தல், கதை சொல்லுதல் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் இளைஞர்கள், பெண்களுக்கான பயிற்சி பட்டறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த 12 வது புத்தகத்திருவிழாவில் மிகவும் முக்கியமான முன்னெடுப்பாக “அன்பு புத்தகப் பெட்டி” என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் முக்கிய நோக்கம் கல்வியை குறிப்பாக வாசிக்கும் பழக்கத்தை மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், ஊக்கப்படுத்தும் வகையிலும் பல்வேறு முயற்சிகளையும் ஏற்படுத்தியுள்ளோம். தமிழக அரசு ஒவ்வொரு கிராமத்திலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி இயக்கத்தில் நூலகங்களை அமைத்துள்ளார்கள். அதேபோல் கிளை நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த நூலகங்ககளில் போட்டித் தேர்வு புத்தகங்கள், திருக்குறள் போன்ற அறநெறிகளை வலியுறுத்தும் புத்தகங்கள் என பல்வேறு புத்தகங்களை மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களால் முடிந்த அளவு புத்தகங்களை அன்பு புத்தகப் பெட்டியில் இட வேண்டுமென கேட்டுக்கொண்டார். அன்னதானம், கண்தானம், உடல் உறுப்பு தானம் செய்வது போல் புத்தகத்தானம் செய்யுமாறு தெரிவித்தார். நம் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 306 நூலகங்கள் மற்றும் 150 கிளை நூலகங்கள் உள்ளன. எனவே மாணவர்கள் பயன்பெறும் வகையில் புத்தகங்களை வழங்கி மாணவர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்குவித்து இந்த புது முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் சமூக தன்னார்வலர்கள் ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இவ்விழாவில் திண்டுக்கல் இலக்கியக் களம் தலைவர் முனைவர் ரெ.மனோகரன், இலக்கியக் களத் துணைத்தலைவர் சரவணன், மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் (கல்வி) அ.சரவணக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.

.

.