Close

Collector Inspection at Ethilodu

Publish Date : 15/03/2025
.

செ.வெ.எண்:-37/2025

நாள்:-12.03.2025

திண்டுக்கல் மாவட்டம்

எத்திலோடு கிராமத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், எத்திலோடு கிராமத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(12.03.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

எத்திலோடு ஊராட்சி, இந்திரா நகர் காலனியில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதாரத்திற்கு தேவையான உள்கட்டமைப்புகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். எத்திலோடு இந்திரா நகரில் சாலை வசதி கோரி பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுவின்பேரில், சம்பந்தப்பட்ட சாலையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், எத்திலோடு அங்கன்வாடி மையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு குழந்தைகளுக்கான பாதுகாப்பு வசதிகள், சுகாதாரம், குடிநீர், உணவு வழங்குதல் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து, ஊரக வீடுகள் சீரமைப்புத் திட்டத்தில் பயனாளிகளின் வீடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், துாய்மைப் பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், குப்பைகள் சேகரிப்பதற்காக வழங்கப்பட்ட குப்பை சேகரிக்கும் வாகனங்கள் இயக்கப்படுவதையும், வாகனங்களை துாய்மைப் பணியாளர்கள் இயக்குவதையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.ஐ.நாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி பஞ்சவர்ணனம் மற்றும் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.