Collector Inspection – Development Works – Palani Panchayat

செ.வெ.எண்:-51/2025
நாள்:-18.03.2025
திண்டுக்கல் மாவட்டம்
பழனி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டபணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி ஊராட்சி ஒன்றியம், கோதைமங்களம், கலிக்கநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(18.03.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி ஊராட்சி ஒன்றியம், கோதைமங்களம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கட்டிடம் கட்டும் திட்டத்தின்கீழ் ரூ.34.23 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணிகள், ரூ.16.82 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கணினி வகுப்பறை கட்டடம் கட்டும் பணிகள், கலிக்கநாயக்கன்பட்டி பிரிவு கிழக்கு காலனியில் பழனி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பயணியர் நிழற்கூடை கட்டுமான பணிகள், கலிக்கநாயக்கன்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மையம் கட்டுமான பணிகள், கலிக்கநாயக்கன்பட்டியில் நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் ரூ.44.00 இலட்சம் மதிப்பீட்டில் 1 இலட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்டுமான பணிகள் ஆகிய வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
கட்டுமான பணிகளை தரமாகவும், விரைந்து நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், பழனி நகரம், வார்டு 4, பிளாக் 48, டவுன் சர்வே எண்.27, வீடுகட்டி குடியிருந்து வரும் 12 நபர்களுக்கு சிறப்பு வரன்முறை திட்டத்தின்கீழ் நத்தமாக வகைபாடு மாற்றம் செய்து வீட்டுமனைப்பட்டா வழங்கும் பொருட்டு இடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது, பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.கண்ணன், உதவி திட்ட அலுவலர் திரு.கிரி, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.வேதா மற்றும் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.