Close

Collector Inspection (KKI)

Publish Date : 21/04/2025
.

செ.வெ.எண்:-56/2025

நாள்:-18.04.2025

திண்டுக்கல் மாவட்டம்

தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடுகள் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடுகள் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(18.04.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், புஷ்பத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கலைஞர் நகரில் ஒரே பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 109 வீடுகள் ரூ.3.37 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. இந்த வீடுகள் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, கட்டுமான பணிகள் குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி தாகிரா, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.பிரபுபாண்டியன், வட்டாட்சியர் திரு.பிரசன்னா மற்றும் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.