Close

Collector Inspection – Kodaikanal

Publish Date : 21/04/2025
.

செ.வெ.எண்:-58/2025

நாள்:-19.04.2025

திண்டுக்கல் மாவட்டம்

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(19.04.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், காமனூர் ஊராட்சியில் மங்களம்கொம்பு கிராமத்தில் ரூ.30.10 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுமான பணிகள், எம்ஜிஆர் நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கீழ்,₹ரூ.16.76 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் உணவு தானிய கிட்டங்கி அமைக்கும் பணிகள் மற்றும் காமனூரில் ரூ.33.50 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மேம்பாட்டு பணிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து தாண்டிக்குடி ஊராட்சியில் ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலைய கட்டடம் மற்றும் கடுகுதடிப்புதூர் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.17.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கண்டார்.

பின்னர், அடுக்கம் ஊராட்சியில், பெருமாள்மலை கிராமத்தில் ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில் குப்பைகள் தரம் பிரிக்கும் கூடாரம் கட்டுமானப் பணிகள் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடுகள் கட்டுமான பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, கொடைக்கானலில் ரூ.10.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மதிகியக்ஸ் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின்னர், தாண்டிக்குடி காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் மற்றும் கண்காணிப்புப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், கோடை விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.