Close

Collector Inspection – Kodaikanal-E-Pass-Plastic

Publish Date : 18/03/2025
.

செ.வெ.எண்:-45/2025

நாள்:-15.03.2025

திண்டுக்கல் மாவட்டம்

கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வருகைப் புரியும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறை மற்றும் அனைத்து வகையான தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நடைமுறைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் வெளியூர் மற்றும் உள்ளுர் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை, கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் அனைத்து வகையான தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கும் பொருட்டு, மேற்கொள்ளப்பட்டுள்ள நடைமுறைகள், சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பாக கொடைக்கானல் மலைச்சாலை பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(15.03.2025) ஆய்வு மேற்கொண்டார்.

கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வருகைப் புரியும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறை, அனைத்து வகையான தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நடைமுறைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், காமக்காப்பட்டி சோதனைச்சாவடி, பண்ணைக்காடு ஜங்ஷன், பெருமாள்மலை சோதனைச்சாவடி, கொடைக்கானல் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, மூஞ்சிக்கல் பகுதியில் போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், கொடைக்கானல் பேருந்து நிலையம் மற்றும் கோக்கர்ஸ்வால்க் ஆகிய பகுதிகளில் குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதிகள், சூசைட்பாய்ட், பிரையண்ட் பூங்கா ஆகிய இடங்களில் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

கொடைக்கானல் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலாமாக உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.

மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் ஆணைப்படியும், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலர் அவர்களின் உத்தரவின்படி மற்றும் வழிகாட்டுதல்களின்படி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் வெளியூர் மற்றும் உள்ளுர் வாகனங்களுக்கு இ-பாஸ் எடுத்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற நடைமுறை 07.05.2024 தேதியிலிருந்து செயல்பாட்டில் உள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான தங்குமிடம், குடிநீர், கழிப்பறை வசதி, போக்குவரத்து வசதி, வாகன நிறுத்துமிடம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசு தலைமைச் செயலர் அவர்களின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்களின்படி சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மேலும் கோடைவிழா போன்ற காலங்களில் வாகனங்கள் வருகையை பொறுத்து கூடுதலான வசதிகள் ஏற்படுத்த வடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கொடைக்கானல் பகுதி மக்கள், வியாபாரிகள், விடுதிகள் என அனைவரது வாழ்வாதாரத்தையும் கருத்தில்கொண்டு சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுமக்கள், வர்த்தகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக உடனடியாக மேற்கொள்ள வேண்டிய சிறிய பணிகள் கோடை விழாவிற்குள் முடிக்கப்படும், நீண்டகால திட்டங்களை நிறைவேற்றிட தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த பணிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.ஐ.நாகராஜன், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.ம.திருநாவுக்கரசு, துணைக் காவல் கண்காணிப்பாளர் திருமதி மதுமதி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் திரு.சங்கர், கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் திரு.பா.செல்லத்துரை, துணைத்தலைவர் திரு.கே.பி.என்.மாயக்கண்ணன், ஆணையாளர் திரு.ப.சத்தியநாதன், சுற்றுலா அலுவலர் திரு.கோவிந்தராஜ், கொடைக்கானல் வட்டாட்சியர் திரு. பாபு மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.