Close

Collector Inspection – Nilakottai – Nursery Farm – Kottur Panchayat

Publish Date : 02/12/2024
.

செ.வெ.எண்:-80/2024

நாள்:-28.11.2024

திண்டுக்கல் மாவட்டம்

நிலக்கோட்டை வட்டம், கோட்டூர் ஊராட்சி சமத்துவபுரத்தில் நாற்றங்கால் பண்ணையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், கோட்டூர் ஊராட்சி சமத்துவபுரத்தில் நாற்றங்கால் பண்ணையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(28.11.2024) ஆய்வு மேற்கொண்டார்

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

பசுமை தமிழ்நாடு இயக்கம் எனும் செயல்பாட்டின்கீழ் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துடன் ஒருங்கிணைந்து காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவினை அதிகரிக்கும் செயல்பாடுகளை மேற்கொள்ள 2024-25 முதல் 2026-27 வரையிலான ஆண்டுகளில் அதிகளவிலான மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 8 ஊராட்சிகளில் வட்டார அளவிலான குழு தேர்வு செய்யப்பட்ட பசுமை தமிழ்நாடு இயக்கம் – நாற்றாங்கால் பண்ணையில் தலா 10,000 மரக்கன்றுகள் வீதம் மொத்த மதிப்பீட்டு தொகை ரூ.1,00,80,000/- மொத்தம் 80,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய வனத்துறையுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறைகள் இணைந்து இச்செயல்பாட்டினை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி சமத்துவபுரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் வனத்துறை மூலம் மேற்கொள்ள ரூ.12,60,000/- மதிப்பீட்டில் 10,000 மரக்கன்றுகளை உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், 2022-23 ஆம் ஆண்டில். கோட்டூர் ஊராட்சி சமத்துவபுரத்தில் ஏற்கனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.9.00 இலட்சம் மதிப்பீட்டில் 10,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு கிராம ஊராட்சிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கியது போக 4,800 மரக்கன்றுகள் இருப்பில் உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2,00,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்து நடவுசெய்ய இலக்கு நிர்ணக்கப்பட்டுள்ளது, முதற்கட்டமாக 80,000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வின் போது, நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) திருமதி தி.பஞ்சவர்ணம் உட்பட பலர் உள்ளனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.