Close

Collector Inspection – Palani – Industry

Publish Date : 15/09/2025
.

செ.வெ.எண்:- 46/2025

நாள்: 12.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

பழனி வட்டத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பழனி வட்டத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், தாழையூத்து மற்றும் வாகரை பகுதிகளில் கோழிகளை பிராசஸ் செய்யும் தொழிற்சாலைகள், கார்மெண்ட்ஸ் தொழிற்சாலைகள், செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலைகள், பேப்பர் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் இதர தொழிற்சாலைகள் என சுமார் 60-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளது. இதில் உள்ளூர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள காளீஸ்வரி ரீபைண்ட் ஆயில் பிரைவேட் லிமிடெட், சாந்தி பீட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் கிளாசிக் அப்பரேல் பேஷன்ஸ் ஆகிய தொழிற்சாலைகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு தொழிற்சாலை நிர்வாகத்தால் உறதி செய்யப்பட வேண்டிய பணி நிலைமைகள், நலன் தொடர்பான அடிப்படை வசதிகள், சம்பளம், வேலை நேரம், தங்குமிடம் மற்றும் உணவு வசதி குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.

மேலும், வெளி மாநில தொழிலாளர்களுக்காக பராமரிக்கப்படும் வலைதளத்தில் தொழிற்சாலையில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களையும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உடன் இருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் செய்வதற்கு புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளதா எனவும் பெறப்படும் புகார்களை தீர்ப்பதற்கு உள்ளக குழு(IC) அமைத்து செயல்பட்டு வருகிறதா என்பதை நிர்வாகத்தினரிடமும் அதிகாரிகளிடமும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.

மேலும், இத்தொழிற்சாலையில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் விபத்து ஏற்படா வண்ணம் தொழிற்சாலையில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் இழப்பீடுகள் தொடர்பாக விசாரணை செய்து உறுதிப்படுத்திக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, திண்டுக்கல் மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் திரு.வீ.புகழேந்தி, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்), பழனி வட்டாட்சியர் திரு.பிரசன்னா, இதர தொழிலாளர் நலத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.

.

.