Collector Inspection – Palani Panchayat Union
செ.வெ.எண்:- 45/2025
நாள்: 11.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
பழனி வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலசமுத்திரம், சின்னகலையம்புதூர், காவலப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.09.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பழனி வட்டம், பாலசமுத்திரம் ஊராட்சியில் ரூ.16.88 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டடத்தை பார்வையிட்டதுடன் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மதிய உணவினை சாப்பிட்டு பார்த்து அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் குறும்பபட்டியில் நியாவிலைக் கடையினை பார்வையிட்டு இருப்பு பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து சின்னகலையம்புதூர் ஊராட்சியில் ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வேளாண்மை விற்பனை சேமிப்பு கிடங்கு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து சின்னகலையம்புதுார் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.18.42 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பார்வையிட்டார் மற்றும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25 இல் 483 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. தற்பொழுது 2025-26 இல் 280 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் விஜயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.4.45 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வகுப்பறை கட்டடம் மராமத்து பணிகளை பார்வையிட்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார் மற்றும் பள்ளி வளாகத்தை நல்ல முறையில் துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டுமென துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
மேலும் காவலப்பட்டி ஊராட்சியில் ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் வகுப்பறை கட்டட மராமத்து பணிகளை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து காவலப்பட்டி ஊராட்சியில் ரூ.36.00 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டுவரும் இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் கணினி ஆய்வகத்தில் மாணவர்கள் பயின்று வருவதை பார்வையிட்டு மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்தார்.
மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் EDD கட்டுப்பாட்டு அறை (1 மருத்துவ அலுவலர் & 1 சமுதாய நல செவிலியர்) மற்றும் மாவட்ட அழைப்பு மையம் (1 செவிலியர் & 1 பகுதி சுகாதார செவிலியர்) ஆகியவற்றை பார்வையிட்டு துறை அலுவலர்களிடம் சரியான முறையில் பணிகள் நடைபெற்று வருகிறதா என கேட்டறிந்தார்.
மாவட்ட சுகாதார அலுவலகம் பழனியில் அனைத்து HR AN தாய்மார்களையும் மொபைல் போன் மூலம் பின்தொடர்தல், Epicollect விண்ணப்பம் மூலம் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து தாய்மார்களையும் பின்தொடர்தல், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர், செவிலியர், பகுதி சுகாதார செவிலியர் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுடன் ஆன்லைன் மதிப்பாய்வு கூட்டம் நடத்துதல், அனைத்து AN தாய்மார்களுக்கும் ஒற்றை பக்க உள்ளீடு புதுப்பிப்பு உறுதி செய்யப்படுவது, தாய்மார்கள் இல்லாத நிலையில் அது குறித்து தணிக்கை செய்யப்படுதல், HR PN தாய்மார்கள் மற்றும் SNCU பிரசவ குழந்தைகள் பின்தொடர்தல், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவத்திற்குப் பிறகு PICME போர்ட்டலில் நிகழ்நேர உள்ளீடு செய்யப்படுகிறதா என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் பழனி வட்டாட்சியர் திரு.பிரசன்னா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதா, நளினா, மாவட்ட சுகாதார அலுவலர் (பழனி) அனிதா மற்றும் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.