Close

Collector Inspection-PT-KKI scheme Vedasandur Union

Publish Date : 28/03/2025
.

செ.வெ.எண்:-77/2025

நாள்:-28.03.2025

திண்டுக்கல் மாவட்டம்

நாகையகோட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாகையகோட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(28.03.2025) செய்தியாளர்களுடன் சென்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் ஊராட்சி ஒன்றியம், நாகையகோட்டை ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்ட வீடு, வைவேஸ்புரத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.9.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நர்சரி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேடசந்துார் ஊராட்சி ஒன்றியம், நாகையகோட்டை ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் தொடர்பாக இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வேடசந்துார் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 245 வீடுகள் ரூ.85.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. அதேபோல் ஊரக குடியிருப்புகள் பழுது பார்க்கும் திட்டத்தில் 153 ஓட்டு வீடுகள் தலா ரூ.70,000 வீதம் ரூ.1.07 கோடி மதிப்பீட்டிலும், 81 சாய்தள வீடுகள் தலா ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் ரூ.1.21 கோடி மதிப்பீட்டிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வைவேஸ்புரத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.9.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நர்சரியில் 10,000 மரக்கன்றுகள் வளர்க்க திட்டமிடப்பட்டு, புங்கம் 1429, மயில்கொன்றை 1555, பூவரசு 385, பாதாம் 150, வேம்பு 65, புளி 418 என 4002 மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளன. மேலும் வாகை 4540, மயில்கொன்றை 1500 என 6040 மரக்கன்றுகள் விதை நடவு செய்யப்பட்டுள்ளன, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனடைந்துள்ள நாகையகோட்டை கிராமம் இந்திரா நகர் திரு.பெருமாள் மனைவி திருமதி ராணி தெரிவித்ததாவது:-

நாங்கள் கூலித்தொழிலாளர்கள். தினமும் கூலி வேலைக்குச் சென்று அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகிறோம். எங்களுக்கு சொந்தவீடு கட்ட வேண்டும் என்ற கனவு நீண்ட நாட்களாக இருந்து வந்தது. ஆனால் எங்களது பொருளாதார நிலை காரணமாக சொந்த வீடு கட்ட முடியாமல் தவித்து வந்தோம். இப்போது, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் நாங்கள் வீடு கட்டியுள்ளோம்.

எங்களைப்போன்ற ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம், என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, வேடசந்துார் ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.சரவணன், திரு.குமரன், துறை அலுவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.