Close

Collector Inspection – Sevukapatti & Batlagundu Town Panchayat

Publish Date : 14/05/2025
.

செ.வெ.எண்:-47/2025

நாள்:-13.05.2025

திண்டுக்கல் மாவட்டம்

சேவுகம்பட்டி மற்றும் வத்தலகுண்டு பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், சேவுகம்பட்டி மற்றும் வத்தலகுண்டு பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (13.05.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், சேவுகம்பட்டி பேரூராட்சிப் பகுதிகளில் தென்னை நடவு செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்களில் ஊடுபயிராக பருத்தி மற்றும் உளுந்து பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து, சேவுகம்பட்டி பேரூராட்சி, இராமகிருஷ்ணாபுரம் மற்றும் வத்தலகுண்டு பேரூராட்சி, பெத்தானியாபுரம் ஆகிய பகுதிகளில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடர்பாக நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் மருந்துகள் இருப்பு, நோயாளிகள் வருகை, நோயாளிகளுக்கான சிகிச்சை முறைகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, சிகிச்சை முறை குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார். அங்குள்ள குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள், சுகாதாரம் உள்ளிட்வை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம், குன்னுவராயன்கோட்டை மற்றும் கூட்டத்துஅய்யம்பாளையம் ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் மஞ்சளாற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தில் ரூ.6.35 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாலம் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின்னர், நடகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தில் ரூ.88.90 இலட்சம் மதிப்பீட்டில் தலா 2 வகுப்பறைகள் கொண்ட இரண்டு கட்டடங்கள் மற்றும் ஆய்வுக்கூடம் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து, நடகோட்டை மற்றும் சித்தர்கள்நத்தம், குல்லிசெட்டிபட்டி ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் வைகை ஆற்றின் குறுக்கே எஸ்சிபிஏஆர் நிதியிலிருந்து ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாலம் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, இணை இயக்குநர்(சுகாதார நலப் பணிகள்) மரு.பூமிநாதன், வேளாண்மை உதவி இயக்குநர் திரு.எஸ்.நாகேந்திரன், நிலக்கோட்டை வட்டாட்சியர் திருமதி விஜயலட்சுமி, வத்தலகுண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.குப்புசாமி, திரு.மணிமாறன், மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.

.

.

.

.