Close

Court- Para-Legal Volunteer (PLVs)

Publish Date : 13/05/2024

செ.வெ.எண்:-05/2024

நாள்:-06.05.2024

திண்டுக்கல் மாவட்டம்

சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்ட தன்னார்வலர்களாக தற்காலிகமாக பணிபுரிய தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான திருமதி ஏ.முத்துசாரதா அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்ட தன்னார்வலர்களாக தற்காலிகமாக பணிபுரிய 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் விண்ணப்பிக்கலாம்.

பணி ஓய்வு பெற்றவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மருத்துவர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் (வழக்கறிஞராகப் பதிவு செய்யும் வரை), அரசியல் சார்பற்ற அரசு சாரா சமூகசேவை நிறுவனங்கள் மற்றும் சங்கப் பிரமுகர்கள், அரசியல் அல்லாத உறுப்பினர்கள், சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள், புறக்கணிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக் கூடிய குழுக்களின் உறுப்பினர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

https://dindigul.dcourts.gov.in/document-category/notification/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை முழுமையாக பூர்த்தி செய்து அடையாள சான்று, முகவரி சான்று, கல்வி சான்றிதழ்கள் ஆகியவற்றில் சுயசான்றொப்பமிட்டு “தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, திண்டுக்கல் 624 004“ என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது பதிவு அஞ்சல் வழியாகவோ 17.05.2024 அன்று மாலை 05.30 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும், என திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான திருமதி ஏ.முத்துசாரதா அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.