Close

DAP Sports

Publish Date : 26/11/2024
.

செ.வெ.எண்:-62/2024

நாள்:-25.11.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(25.11.2024) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வயது மற்றும் உடல் குறைபாடுகளின்படி வகைப்படுத்தப்பட்டதன் அடிப்படையில், ஓட்டம், நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம், குண்டு எறிதல், நின்று நீளம் தாண்டுதல், வட்டத் தட்டு எறிதல், உருளைக்கிழங்கு சேகரித்தல், கிரிக்கெட் பந்து எறிதல், தடை தாண்டி ஓடுதல், நடைபோட்டி என பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடத்தப்பட்டன.

இந்தப் போட்டிகளில் அக்ஷரா சிறப்புப்பள்ளி, அம்மா இல்லம், வில்லியன் சிறப்புப் பள்ளி, குருகுல் சிறப்புப்பள்ளி, அவார்டு சிறப்புப்பள்ளி, ஆர்வி சிறப்புப்பள்ளி, விஎம்வி சிறப்புப்பள்ளி(செம்பட்டி), புதுஉதயம் சிறப்புப்பள்ளி, ஆர்சிட் சிறப்புப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 175 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு. இரா. சிவா மற்றும் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.