Close

DDAWO – Artificial Limbs Manufacturing Corporation of India (ALIMCO) i

Publish Date : 09/10/2024

செ.வெ.எண்:-12/2024

நாள்:-05.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கு மதிப்பீட்டு முகாம், தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 07.10.2024 அன்று நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், தகவல்.

மத்திய அரசின் அதிகாரமளிப்பு துறையின்கீழ் செயல்படும் அலிம்கோ நிறுவனம் மூலம் (ALIMCO) மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கரவண்டி, சக்கரநாற்காலி, மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலி, காதுக்கு பின் அணியும் காதொலி கருவி, முடநீக்கு சாதனம், செயற்கைகால், ஊன்றுகோல், ரோலேட்டர், பிரெய்லிகிட், பார்வையற்றோருக்கு அதிரும் ஊன்றுகோல், பிரெய்லிசிலேட், மனவளர்ச்சி குன்றியயோருக்கு TLM Kit, தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு ADL Kit போன்ற உதவி உபகரணங்கள் இலவசமாக வழங்கி வருகிறது. மேற்படி நிறுவனம் மூலம் வழங்கப்படும் உபகரணங்கள் பெறுவதற்கு பயனாளிகள் தேர்வு செய்வதற்கான மதிப்பீட்டு முகாம் 10 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டு அனைத்து இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

தற்போது கூடுதலாக தொப்பம்பட்டி வட்டாரத்தில் முகாம் நடத்த திட்டமிடப்பட்டு, 07.10.2024 (திங்கள்கிழமை) தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முகாம் நடைபெறவுள்ளது.

உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுதிறனாளிகள் ஆதார் அட்டைநகல், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, போட்டோ-2 மற்றும் UDID கார்டுநகல் ஆகிய ஆவணங்களுடன் தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 07.10.2024 அன்று நடைபெறும் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.