DDAWO-Home
செ.வெ.எண்:-35/2025
நாள்:-09.07.2025
திண்டுக்கல் மாவட்டம்
குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் பதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இத்தகைய இல்லங்கள் அனைத்தும் பின்வரும் பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கான சட்டங்களின்படி பதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டும்.
| வ. எண் | விடுதிகள்(ம)இல்லங்கள் வகைப்பாடு | சம்பந்தப்பட்ட துறை | பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கான சட்டப் பிரிவு |
| 1 | குழந்தைகள் இல்லங்கள் | குழந்தைகள் நலன் (ம) சிறப்புச்சேவைகள் | இளைஞர் (நீதி பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு)சட்டம், 2015. |
| 2 | முதியோர் இல்லங்கள் | சமூநலத்துறை | மூத்த குடிமக்களுக்கான சட்டம்,2007. |
| 3 | மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள் | மாற்றுத்திறனாளிகள் நலத் துறை | மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016. |
| 4 | மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள் | மாற்றுத்திறனாளிகள் நலத் துறை | மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016. |
| 5 | போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள் | தமிழ்நாடு மாநில மனநல ஆணையம் (StateMental Health Authority) | மனநல பாதுகாப்புச் சட்டம் 2017 |
| 6 | பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் | சமூகநலத்துறை | பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்களுக்கான (ஒழுங்குமுறை) சட்டம் 2014. |
| 7 | மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் | தமிழ்நாடு மாநில மனநல ஆணையம் (StateMental Health Authority) | மனநல பாதுகாப்புச்சட்டம்,2017. |
அவ்வாறு பதிவு பெறாமல் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சிகுன்றியோர்கள் மாற்றுத்திறனாளிகள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் விடுதிகள் ஆகியவை உரிய முறையில் கீழ் குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் / அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்க ஒருமாத காலம் அவகாசம் வழங்கப்படுகிறது.
| வ. எண் | விடுதிகள்(ம)இல்லங்கள் வகைப்பாடு |
விண்ணப்பிக்க வேண்டிய இணையத்தளம்/ அலுவலகம் |
| 1 | குழந்தைகள் இல்லங்கள் | https://dsdcpimms.tn.gov.in (அல்லது) மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் |
| 2 | முதியோர் இல்லங்கள் | www.seniorcitizenhomes.tnsocialwelfare.tn.gov.in (அல்லது)மாவட்ட சமூக நல அலுவலகம். |
| 3 | மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள் |
https://scd.tn.gov.in/-andnavigateto“Thiran Platform” (அல்லது) மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம். |
| 4 | மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள் | https://scd.tn.gov.in/-and navigate to“Thiran Platform” (அல்லது) மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் |
| 5 | போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள் | https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php (அல்லது) முதன்மை செயல்அலுவலர், தமிழ்நாடு மாநில ஆணையம், அரசு மனநல காப்பகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை – 10 அவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். |
| 6 | பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் | https://tnswp.com ( அல்லது) மாவட்ட சமூக நல அலுவலகம். |
| 7 | மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் | https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php (அல்லது) முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில ஆணையம், அரசு மனநல காப்பகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை – 10 அவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். |
இதன்படி, பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து இல்லங்கள் மற்றும் விடுதிகள், உடனடியாக மேற்காணும் இணையத்தளம் (portal) அலுவலகம் வாயிலாக ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
அவ்வாறு ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க தவறும்பட்சத்தில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இவ்வில்லங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.