Close

DDAWO-Special Camp

Publish Date : 08/07/2025

செ.வெ.எண்:-19/2025
நாள்:-05.07.2025
திண்டுக்கல் மாவட்டம்

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் நலன்களுக்கான சிறப்பு முகாம்கள் 07.07.2025 அன்று குஜிலியம்பாறை, 08.07.2025 அன்று சிவகிரிப்பட்டி, 09.07.2025 அன்று தொப்பம்பட்டி, 10.07.2025 அன்று வேடசந்துார், 11.07.2025 அன்று வத்தலகுண்டு, 12.07.2025 அன்று செட்டிநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சென்றடைய ஏதுவாக அலிம்கோ நிறுவனத்துடன் இணைந்து 19 அரசுத் துறைகளும் ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்கள் கீழ்கண்ட தேதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடத்தப்பட உள்ளன.

அதன்படி, 07.07.2025 அன்று குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி, 08.07.2025 அன்று பழனி சிவகிரிப்பட்டி எஸ்கேஎம் மஹால், 09.07.2025 அன்று தொப்பம்பட்டி வீரகுமார் திருமண மண்டபம், 10.07.2025 அன்று வேடசந்துார் சினேகா மஹால், 11.07.2025 அன்று வத்தலகுண்டு ஏஎம்எஸ் மஹால், 12.07.2025 அன்று திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி சபரி மஹால் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன.

முகாம்களில் அலிம்கோ நிறுவனத்துடன் இணைந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை(UDID), பராமரிப்பு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, வங்கிக் கடன் மானியம், உதவி உபகரணங்கள், வருவாய் துறை மூலமாக வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, உழவர் பாதுகாப்பு அட்டை, ஊரக வளர்ச்சித் துறை மூலமாக வழங்கப்படும் மகாத்மாகாந்தி தேசிய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் முழு ஊதியத்துடன் கூடிய நூறு நாள் வேலைஅட்டை பதிவு, கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் விலையில்லா வீடு வழங்கும் திட்டம், மருத்துவத் துறையின் மூலம் இலவச பஸ் பாஸ் மற்றும் இரயில்வே பாஸ் பதிவு செய்தல், மாவட்ட தொழில் மையம் மூலமாக வழங்கப்படும் பாரத பிரமரின் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) மற்றும் மத்திய அரசின் வேலையில்லா படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP) போன்ற திட்டங்களின் கீழ் கடன் வழங்குதல், தாட்கோ மூலமாக வங்கிக் கடன், கூட்டுறவு வங்கியின் மூலமாக வங்கிக் கடன் பெறுதல் (NHFDC), முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், அடையாள அட்டை பதிவு மேற்கொள்ளுதல், ஆதார் சேவை மற்றும் இ-சேவை ஆகிய பல்துறை அரசின் நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே இடத்தில் வழங்கப்பட உள்ளன. இந்த வாய்ப்பை அந்தந்த பகுதி பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர், திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.