Differentially Abled Person – Grievance Day Petition
செ.வெ.எண்:-56/2024
நாள்:-22.11.2024
திண்டுக்கல் மாவட்டம்
ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 26.11.2024 அன்று மாற்றுத்திறனாளிகள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் வருவாய் கோட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 26.11.2024-ம் தேதி காலை 10.30 மணியளவில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் நத்தம் வட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் கலந்துகொண்டு பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.