Close

Disaster Management – Meeting

Publish Date : 24/04/2025
.

செ.வெ.எண்:-65/2025

நாள்:-23.04.2025

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகப்படியான திடீர் வெடிச்சத்தம் ஏற்படுவதற்கான உரிய காரணங்களை தேசிய நிலநடுக்கவியல் மையத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் சத்தம் அடிக்கடி உணரப்படும் இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகப்படியான திடீர் வெடிச்சத்தம் ஏற்படுவதற்கான உரிய காரணங்களை துல்லியமாக கண்டறியும் பொருட்டும், அதற்கேற்றவாறு மாவட்ட நிருவாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் பொதுமக்களை தெரிவுபடுத்திடும் பொருட்டும், ஆய்வு செய்திட புவியியலாளர்கள் மற்றும் நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றினை திண்டுக்கல் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, இன்று (23.04.2025) தேசிய நிலநடுக்கவியல் மையத்தைச் சேர்ந்த (National Centre for Seismology) அறிவியலாளர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களை கொண்ட குழுவானது சத்தம் அடிக்கடி உணரப்படும் இடங்களான திண்டுக்கல் நகர் மற்றும் வேடசந்தூர் வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களான குளத்தூர், பாடியூர், தும்மலக்குண்டு மற்றும் வடமதுரை ஆகிய இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.