Close

District AD Welfare Office – DINDIGUL – Notification

Publish Date : 30/07/2024

செ.வெ.எண்:-77/2024

நாள்: 28.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பெரும்பாறை மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஒரு முதுநிலை இயற்பியல் ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பெரும்பாறை அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஒரு முதுநிலை இயற்பியல் ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தற்காலிக தொகுப்பூதிய முதுநிலை இயற்பியல் ஆசிரியர் பள்ளி மேலாண்மை குழு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

தொகுப்பூதியத்தில் நிரப்பப்படும் முதுநிலை இயற்பியல் ஆசிரியர் பணியிடங்களுக்கு வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் முதுகலைபட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் தகுதிகள் பெற்றுள்ள பணிநாடுநர்கள் பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள் (இல்லையெனில்), பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்கள் (இல்லையெனில்), மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள் (இல்லையெனில்), மற்றும் அருகாமை மாவட்டத்தில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.

தற்காலிக பணியிடத்தில் பணிபுரிய விருப்பமுள்ள நபர்கள் உரிய கல்விச்சான்றுகளுடன் விண்ணப்பங்களை, திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ, அல்லது தபால் மூலமாகவோ எதிர் வரும் 31.07.2024-ஆம் தேதிக்குள் அளிக்கலாம் என்ற விவரம் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.