DPIU-Mahalir Thittam
செ.வெ.எண்:-07/2025
நாள்:-03.01.2025
திண்டுக்கல் மாவட்டம்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் முன்மாதிரி மாவட்ட அளவிலான கூட்டமைப்புகளுக்கு மாவட்ட வள பயிற்றுநர் ஒப்பந்த பணியாளர் பணிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் முன்மாதிரி மாவட்ட அளவிலான கூட்டமைப்புகளுக்கு(MBLFs) 1 மாவட்ட வள பயிற்றுநரை ஒப்பந்த அடிப்படையில் ஒப்பந்த பணியாளராக பணி அமர்வு செய்திட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு செய்யப்படும் மாவட்ட வள பயிற்றுநருக்கு மாதாந்திர ஊதியம் ஏதும் வழங்கப்படாது. தனியர் மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக 18 நாட்கள் பயிற்சி பணி மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு பயிற்சி பணி மேற்கொள்ளும் நாட்களுக்கு நாள் ஒன்றிற்கு மதிப்பூதியமாக ரூ.1,250 மற்றும் பயிற்றுநர்களின் பயிற்சியில் தனியர் கலந்துகொண்டிருந்தால் நாள் ஒன்றிற்கு ரூ.625 மதிப்பூதியமாக வழங்கப்படும்.
பணியியில் சேர விரும்புபவர்கள், 25 வயதிலிருந்து 55 வயதுக்குள்(01.11.2024ம் தேதி நிலையில்) இருக்க வேண்டும். இளநிலை பட்டப்படிப்புடன் பயிற்சியாளராக 3 வருட அனுபவம் அல்லது முதுநிலை பட்டப்படிப்புடன் பயிற்சியாளராக ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. ஒப்பந்த பணியாளராக பணியமர்வு செய்வதால் பணி நிரந்தரம் குறித்து உரிமை கோர இயலாது.
விண்ணப்பங்கள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கத்தில் நேரடியாகவும், www.dindigul.nic.in என்ற வலைதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் திண்டுக்கல், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்க அலுவலகத்திற்கு 10.01.2025-ம் தேதி மாலை 05.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலக தொலைபேசி எண் 0451 – 2460050, உதவி திட்ட அலுவலர் அலைபேசி எண் 99442 32879 ஆகியவை வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.