Close

Drug free Tamilnadu-ITI

Publish Date : 24/04/2025
.

செ.வெ.எண்:-61/2025

நாள்:-23.04.2025

திண்டுக்கல் மாவட்டம்

“போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு“ விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு“ விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(23.04.2025) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதனடிப்படையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, போதையில்லா தமிழ்நாட்டை அடைய அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

போதைப்பழக்கம் என்பது ஒரு தனி மனிதனை மட்டுமின்றி, அந்த குடும்பத்தையும். சமூகத்தையும் பாதிப்படையச் செய்துவிடும். இது சமூகத்திற்கு தேவையற்றது, சமூகத்திற்கு எதிரானது, சமூக வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கக் கூடியதாக போதை உள்ளது. போதைக்கு ஒருவர் அடிமையானால் அவருடைய குடும்ப சூழ்நிலை மற்றும் நிம்மதி கெட்டுவிடும். சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் சூழ்நிலையும் உருவாகலாம். அதனால்தான் போதை இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

பள்ளி, கல்லுாரி போன்ற கல்வி நிறுவனங்கள் உள்ள பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யக் கூடாது. போதைக்பொருளை விற்பது, அவற்றை பயன்படுத்த வற்புறுத்தும் செயல்கள் எல்லாம் குற்றச் செயல்களாக கருதப்படும்.

இந்த சமூகத்தில் நல்ல குடிமகனாக திகழ படிப்பு மிக முக்கியம். அதைவிட சுய ஒழுக்கம் மிகவும் முக்கியம். சமூகத்தில் தங்களின் பங்களிப்பை அளிக்க, பணிபுரியும் இடங்களில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்திட உடல் நலமும், மன நலமும் மிகவும் முக்கியம். அதை உறுதிப்படுத்துவதற்காகத்தான் மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

போதைப்பொருள், பிற போதைப்பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் போன்ற போதைப்பொருள் தொடர்பான பிரச்சனைகள் குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக “போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு“ என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் செயலி மூலம் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து கல்வி நிறுவனங்களின் தொடர்புடைய முதல்வர், தலைமை ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்வி நிறுவனங்களுக்கு அருகில் போதைப்பொருள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்டுவதாக தெரியவந்தால், இது தொடர்பாக புகார்கள் அளிக்கலாம். இவ்வாறு பெறப்படும் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி மூலம் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு அடைவதுடன், நண்பர்கள், உறவினர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாவதை தடுத்திடலாம். பிறப்பு என்பது சாதாரண சமூகத்தில் இருந்தாலும், இறப்பு என்பது சரித்திம் படைத்து, சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழியேற்றுக்கொண்டனர். மேலும் மொபைல் ஆப் மூலம் “DRUG FREE TN” என்ற செயலியை பதிவிறக்கம் செய்து மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதனைத்தொடர்ந்து, மாணவர் விடுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், மதுரை மண்டல இணை இயக்குநர்(ஐடிஐ) திரு.ஆர்.மகேஸ்வரன், உதவி ஆணையாளர்(கலால்) திரு.ஆர்.பால்பாண்டி, துணை காவல் கண்காணிப்பாளர்(மதுவிலக்குப்பிரிவு) திரு.முருகன், திண்டுக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் திரு.ஜெயரட்சகராஜராஜன், அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.