Close

Drugs Free TamilNadu- Meeting

Publish Date : 12/08/2024
.

செ.வெ.எண்:17/2024

நாள்:-08.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

“போதையில்லா தமிழ்நாடு“ குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடத்துதல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “போதையில்லா தமிழ்நாடு“ என்ற மாபெரும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடத்துதல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(08.08.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள்(11 மற்றும் 12-ஆம் வகுப்பு) மாணவர்கள், அனைத்து கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொது இடங்களில் “போதையில்லா தமிழ்நாடு“ என்ற மாபெரும் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு 12.08.2024 அன்று காலை 10.30 மணியளவில் நடத்தப்படவுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லுாரிகளில் விழிப்புணர்வு நிகழ்வுகளில் 30-45 நிமிடங்கள் போதைப்பொருள் எதிர்ப்பு தொடர்பான மேடைப்பேச்சு, கட்டுரைப்போட்டி மற்றும் சிறிய நாடகம் போன்றவற்றை நடத்தி வீடியோவாக ஆவணப்படுத்தியும், போதைப்பொருள்களுக்கு எதிரான Anti club அமைத்தும், e-Pledge எடுத்து சான்றினை பதிவிறக்கம் செய்து அறிக்கையினை அளித்திட வேண்டும். பள்ளி மற்றும் கல்லுாரிகளில் நடைபெறும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திட ஊரக வளர்ச்சித்துறையினர் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

என்எஸ்எஸ் மற்றும் என்சிசி ஒருங்கிணைப்பாளர்கள், காவல் துறையினருடன் இணைந்து பொது இடங்களில் “போதையில்லா தமிழ்நாடு“ என்ற மாபெரும் போதைப்பொருள் எதிர்ப்பு பேரணிகளை நடத்திட வேண்டும்.

வருவாய்த்துறையினர், மதுவிலக்கு மற்றும் அமலாக்கப்பிரிவினர், போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவினர், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறையினர், கோட்ட கலால் அலுவலர்கள், தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள், பிற பங்குதாரர்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் உறுதிமொழி ஏற்பு நிகழ்விற்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

உறுதிமொழியேற்பு தொடர்பான விபரத்தினை சம்பந்தப்பட்ட அலுவலர்கள், புகைப்படங்களுடன் உரிய படிபத்தில் படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும். மேலும், உறுதிமொழி ஏற்பு நிகழ்வினை https://enforcementbureautn.org/pledge என்ற இணைதள முகவரியில் உள்ளீடு செய்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து அனுப்பி வைக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., உதவி ஆணையர்(கலால்) திரு.பால்பாண்டி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.