DSWO – Anbu Solai Center
செ.வெ.எண்:-09/2025
நாள்:-03.07.2025
திண்டுக்கல் மாவட்டம்
மூத்த குடிமக்களுக்கு அன்புச்சோலை மையங்கள் அமைத்திட தன்னார்வ அரசு சாரா தொண்டு நிறுவனத்திடமிருந்த கருத்துருக்கள் வரவேற்கப்படுகிறது- மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
மூத்த குடிமக்கள் நல்வாழ்விற்கென, அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 25 அன்புச்சோலை மையங்களை ஏற்படுத்தி மாண்புமிகு நிதி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் அவர்களால் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல். மாவட்டத்தில் முதியோர் நலனுக்கென அன்புச்சோலை மையம் அமைத்திட மூன்று ஆண்டுகள் முதியோர் இல்லம் நடத்தி வரும் தன்னார்வ அரசு சாரா தொண்டு நிறுவனத்திடம் இருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகிறது.
அன்புச்சோலை மையம் என்பது மூத்த குடிமக்கள் நலனுக்கென பகல் நேரத்தில் மட்டும் செயல்படும் ஒரு மையமாகும். இம்மையத்தில் முதியோர்களுக்கென உரிய மருத்துவ வசதிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவை அமைக்கப்பட வேண்டும். மேலும், இம்மையம் அமைப்பதற்கு அரசு மானியம் வழங்கப்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அன்புச்சோலை மையம் அமைத்திட கருத்துருக்களை, மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம். திண்டுக்கல் என்ற அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.