Close

Dswo-Award

Publish Date : 04/09/2025

செ.வெ.எண்:-09/2025

நாள்:-03.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

வீர தீர செயல் புரிந்த 13 முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தகுதிகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24 ஆம் தேதி அன்று பாராட்டு பத்திரமும், ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

“பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண்குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு, வீர தீர செயல் புரிந்த, 13 முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, தகுதிகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24ஆம் தேதி அன்று பாராட்டு பத்திரமும், ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இவ்விருதுக்கு, பெண் கல்வி, பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான/தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் ஆகிய துறைகளில் வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும். எனவே, 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைகளிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) 29.11.2025க்குள் பதிவேற்றம் செய்து கருத்துருவினை அறை எண்.88,89. மாவட்ட சமூகநல அலுவலகம், திண்டுக்கல் என்ற முகவரிக்கு மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.