DSWO hub
செ.வெ.எண்:-37/2025
நாள்:-09.07.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாவட்ட மகளிர் அதிகார மையத்திற்கு கணக்கு உதவியாளர் பணியிடத்திற்கு முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்ட சமூகநல அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்திற்கு (HUB) கணக்கு உதவியாளர் பணியிடத்திற்கு முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்தப் பணியிடத்திற்கு 40 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ அல்லது பட்டதாரி அக்கவுண்ட்ஸ்(Accounts) சம்பந்த படிப்பு படித்தவர்கள் மற்றும் அரசு அல்லது அரசு சாரா நிறுவனங்களுடன் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒரு காலிப்பணியிடம் உள்ளது. ஒப்பந்த ஊதியம்(மாதம்) ரூ.20,000 வழங்கப்படும்,
இப்பதவிக்கான விண்ணப்பம் மற்றும் தகவல்களை திண்டுக்கல் மாவட்ட இணையதளத்தில் (dindigul.nic.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை “மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, அறை எண்.88 (தரைதளம்), மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், திண்டுக்கல் மாவட்டம்-624004“ என்ற முகவரிக்கு வரும் 15.07.2025 மாலை 05.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.