Close

DSWO -Senior Citizens Mobile App

Publish Date : 07/07/2025

செ.வெ.எண்:-10/2025

நாள்:-03.07.2025

திண்டுக்கல் மாவட்டம்

மூத்த குடிமக்கள், seniorcitizen.tnsocialwelfare என்ற கைப்பேசி செயலியினை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்களால், மூத்த குடிமக்கள் நலன் கருதி செப்டம்பர் 2023-ல் seniorcitizen.tnsocialwelfare என்ற கைப்பேசி செயலி வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த கைப்பேசி செயலியில் மூத்த குடிமக்களுக்கு தேவையான வழிகாட்டுதல் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக அருகாமையில் உள்ள முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், ஒன்றிய மாநில திட்டங்கள், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், அதிகாரிகள் விவரம், உடற்பயற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விவரங்கள், மாற்று மருத்துவ மருத்துவமனை விவரங்கள் மற்றும் அவர்கள் குறைகள் தெரிவித்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து மூத்த குடிமக்களும் மேற்கண்ட கைப்பேசி செயலியினை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.