Close

DSWO-Widow welfare board

Publish Date : 30/06/2025

செ.வெ.எண்:-103/2025

நாள்:-26.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளைக் களைந்து அவர்கள் வாழ்வதற்குரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுயஉதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற் பயிற்சிகள் வழங்குதல், சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்கு ‘கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நலவாரியம்”அமைக்கப்பட்டுள்ளது.

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நலவாரியத்திற்கெனதனியே இணையதளம் www.tnwidowwelfareboard.tn.gov.in உருவாக்கப்பட்டு, இந்த இணையதள பக்கத்தின் மூலம் தமிழ்நாட்டின் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் ஏழை, எளிய கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை அரசிடமிருந்து எளியமுறையில் பெறலாம்.

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. எனவே இச்சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெற உறுப்பினர் பதிவுக்கு ஆதார் அட்டை, குடும்பஅட்டை, விதவை சான்றிதழ், புகைப்படம், வருமானச்சான்று, இருப்பிடசான்று மற்றும் கைபேசி எண் ஆகியவ pபரங்களுடன் அணுகவேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களிலும் இந்த நலவாரியத்தின் உறுப்பினர் சேர்க்கைமுகாம் கீழ்காணும் தேதிகளில நடைபெற உள்ளது.

வ.எண் முகாம் நடைபெறும் இடம் மற்றும் வட்டாரம் முகாம் நடைபெறும் நேரம் மற்றும் தேதி
1 வட்டார வளர்ச்சி அலுவலகம், ஆத்தூர் காலை 10.00 முதல் மாலை 4.00 வரை /
30.06.2025
வட்டார வளர்ச்சி அலுவலகம், ஒட்டன்சத்திரம்.
வட்டார வளர்ச்சி அலுவலகம், பழனி
2 வட்டார வளர்ச்சி அலுவலகம், தொப்பம்பட்டி காலை 10.00 முதல் மாலை 4.00 வரை /
01.07.2025
வட்டார வளர்ச்சி அலுவலகம், ரெட்டியார்சத்திரம்
வட்டார வளர்ச்சி அலுவலகம்,  திண்டுக்கல்
3 வட்டார வளர்ச்சி அலுவலகம், வடமதுரை காலை 10.00 முதல் மாலை 4.00 வரை /
02.07.2025
வட்டார வளர்ச்சி அலுவலகம், வேடசந்தூர்
வட்டார வளர்ச்சி அலுவலகம், குஜிலியம்பாறை
4 வட்டார வளர்ச்சி அலுவலகம், நத்தம் நத்தம் காலை 10.00 முதல் மாலை 4.00 வரை /
03.07.2025
வட்டார வளர்ச்சி அலுவலகம், சாணார்பட்டி
வட்டார வளர்ச்சி அலுவலகம், நிலக்கோட்டை
5 வட்டார வளர்ச்சி அலுவலகம், வத்தலக்குண்டு காலை 10.00 முதல் மாலை 4.00 வரை /
04.07.2025
வட்டார வளர்ச்சி அலுவலகம், கொடைக்கானல்

மேற்காணும் தேதிகளில் வட்டாரவளர்ச்சி அலுவலகங்களை அணுகி கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.