DVLC DADWO
செ.வெ.எண்:-20/2024
நாள்:-12.11.2024
திண்டுக்கல் மாவட்டம்
மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு ஆகிய குழுக்களை மாற்றி அமைக்க தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மக்களின் நலனை பேணுவதற்காக மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு ஆகிய குழுக்கள் செயல்பட்டு வருகின்ற நிலையில் இக்குழுக்களை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது இயங்கி வரும் இக்குழுக்களானது ஜனவரி 2022 முதல் டிசம்பர் 2024 வரைக்கான காலம் முடிவுற்ற நிலையில் ஜனவரி 2025 முதல் டிசம்பர் 2027 வரைக்கான மூன்றாண்டு காலத்திற்கு புதியதாக குழு நியமனம் செய்ய வேண்டியுள்ளதால், விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மேலும் விண்ணப்பதாரர்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் அலுவலக நாட்களில் அலுவலக பணி நேரத்தில், நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 20.11.2024 தேதி பிற்பகல் 05.00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும், என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.